தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரியாகியிருக்கும் தேசிய விருது நடிகர்!

‘பொதுவாக எம்மனசு தங்கம்’ மூலம் ரீ-என்டிரியாகியிருக்கும் நடிகர் ஜி.எம்.சுந்தர்!

செய்திகள் 14-Aug-2017 3:59 PM IST VRC கருத்துக்கள்

கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ‘புன்னகை மன்னன்’ படத்தின் மூலம் இயக்குனர் கே.பாலச்சந்தரால் நடிகராக அறிமுகமானவர் ஜி.எம்.சுந்தர். ‘புன்னகை மன்னன்’ படத்தை தொடர்ந்து அதர்மம், கிழக்குகரை, பொன்னுமணி, நண்பர்கள், கிழக்கும் மேற்கும் உட்பட 50-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் ஜி.எம்.சுந்தர்.

லெனின் இயக்கத்தில், ஜெயகாந்தன் கதை ஒன்று ‘ஊருக்கு நூறு பேர்’ என்ற பெயரில் படமானது. இதில் ஜி.எம்.சுந்தர் தான் கதாநாயகன். இந்த படத்திற்கு தேசிய விருது கிடைத்தது. அதைப் போல இவர் ‘ஊருமாற்றம்’ என்ற ஒரு குறும் படத்திலும் நடித்துள்ளார். இந்த குறும்படமும் தேசிய விருதுக்கு தேர்வாகி அப்போதைய குடியரசு தலைவர் அப்துல்கலாம் கையால் சிறந்த நடிகருக்கான விருது பெற்றுள்ளார்.

கடந்த வருடம் வெளியான விஜய்சேதுபதியின் ‘காதலும் கடந்து போகும்’ படத்தில் ஒரு சிறிய கேரக்டரில் நடித்த ஜி.எம்.சுந்தர், சமீபத்தில் வெளியான ‘பொதுவாக எம்மனசு தங்கம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் மீண்டும் நடிக்க வந்துள்ளார். இந்த படத்தில் ஊர்த் தலைவர் கேரக்டரில் நடித்துள்ள ஜி.எம். சுந்தர் கூறும்போது, ‘‘உதயநிதி ஸ்டாலின், தயாரிப்பாளர்கள் என்.ராமசாமி, ஹேமா ருக்மணி, நடிகர்கள் பார்த்திபன், சூரி ஆகியோர் ஆதரவில் தளபதி பிரபு இயக்கத்தில் ‘பொதுவாக எம்மனசு தங்கம்’ படத்தில் நடித்துள்ளேன். இந்த படத்தில் நடித்த எனக்கும் ரசிகர்கள் நல்ல வரவேற்பை தந்துள்ளனர். இந்த படத்தை தொடர்ந்து நான்கு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளேன். பெரும் மகிழ்ச்சியாக இருக்கிறது. தொடர்ந்து படங்களில் நடிக்க வேண்டும் என்பதே என் விருப்பம்’’ என்றார்.

#GMSundar #PodhuvagaEmmanasuThangam #KadhalumKadanthuPogum #PunnagaiMannan #Sathya #Adharmam

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பட்டாஸ் ட்ரைலர்


;