விஜய்சேதுபதி, ஜோதிகா படத்தை பாராட்டிய அன்புமணி ராமதாஸ்!

நாங்கள் சினிமாவுக்கு எதிரானவர்கள் இல்லை! – டாக்டர் அன்புமணி ராமதாஸ்

செய்திகள் 18-Aug-2017 4:40 PM IST Top 10 கருத்துக்கள்

இன்று சினிமாவுக்கு வருபவர்களுக்கு ஒரு விசிட்டிங் கார்ட் போன்று பயன்படுவது குறும்படங்கள் தான்! குறும் படங்களின் மூலம் தங்களது திறமையை நிரூபித்து சினிமாவுக்கு வந்து வெற்றிகளை குவித்த பலர் பேரை பட்டியலிடலாம். அந்த வரிசையல் குணாநிதி என்ற இளைஞர் நடிப்பில் உருவாக்கியுள்ள ஒரு குறும் படம் ‘A STROKE OF DISSONANCE’. இந்த படத்தை ஸ்டண்ட் மாஸ்டர் ராம்போ ராஜ்குமாரின் மகன் ராம்போ நவகாந்த் இயக்கியுள்ளார்.
தன்னுடைய படைப்பை முழுமையாக்க முயற்சிக்கும் ஒரு கலைஞனின் தவிப்பையும், போராட்டத்தையும் பதிவு செய்யும் குறும்படம் இது. இந்த குறும்படத்தை இன்று பத்திரிகையாளர்களுக்கு திரையிட்டு காண்பித்தனர். இந்த நிகிழ்ச்சியில் கலைப்புலி எஸ்.தாணு, இயக்குனர்கள் விக்ரமன், சீனுராமசாமி, மருத்துவர் அன்புமணி ராமதாஸ் முதலானோர் கலந்துகொண்டு படக்குழுவினரை பாராட்டினர். இந்த படத்தில் நடித்திருக்கும் குணாநிதி, மருத்துவர் அன்புமணி ராமதாஸின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.
அப்போது டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேசும்போது, ‘‘எல்லோரும் எங்கள் குடும்பம் சினிமாவுக்கு எதிரான குடும்பம் என்று நினைத்து கொண்டிருக்கிறார்கள். உண்மையில் அப்படியில்லை! எங்க அப்பா முதல் கொண்டு எங்க குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவரும் சினிமா பார்ப்பவர்கள் தான்! புகை பிடிப்பது, மது அருந்துவது, கலாசாரா சீரழிவை ஏற்படுத்துவது மாதிரியான காட்சிகளை சினிமாவில் வைக்கக் கூடாது, அது போன்ற காட்சிகள் நம் சமுதாய சீரழிவுக்கு காரணமாகிறது என்பதால் அதுபோன்ற காட்சிகளை தவிர்த்து விடுங்கள் என்று தான் நாங்கள் சொல்கிறோம்.
நல்ல கருத்துக்களை வலியுறுத்தியும் நிறைய திரைப்படங்கள் வருகிறது. உதாரணமாக ஜோதிகா நடிப்பில் வெளியான ‘மொழி’, விஜய்சேதுபதி நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘தர்மதுரை’ போன்ற படங்களை சொல்லலாம்! இந்த படங்களில் நல்ல மெசேஜ் சொல்லப்பட்டிருந்தது. ‘மொழி’ படம் வெளியான பிறகு பேச முடியா, காது கேளாதோர் மீது ஒரு தனி பரிவு, மரியாதை ஏற்படும் விதமாக அந்த படம் அமைந்திருந்தது. அந்த படத்தில் ஜோதிகா மிக சிறப்பாக நடிக்கவும் செய்திருந்தார். அதைப் போல ‘தர்மதுரை’ படத்தில் மருத்துவ துறையின் மகத்துவத்தை வலியுறுத்துவிதமாக அந்த படத்தின் திரைக்கதையும், அதில் விஜய் சேதுபதியின் நடிப்பும் அமைந்திருந்தது. மக்களுக்கு நல்ல மெசேஜ் சொல்லும் படங்கள் நிறைய வரவேண்டும்’’ என்பதையே நாங்கள் வலியுறுத்துகிறோம்’’ என்றார்.

#ASTROKEOFDISSONANCE #Gunanithi #AnbumaniRamadoss #DharmaDurai #Mozhi #VijaySethupathi #Jyothika #SeenuRamasamy #Vikraman #KalaipuliSThanu

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஜிமிக்கி கம்மல் வீடியோ பாடல் - ஜோதிகா - காற்றின் மொழி


;