ஃபளாஷ்பேக் வியாழன் - இயக்குனர் ஸ்ரீதரின் தொழில் பக்தி!

இயக்குனர் ஸ்ரீதரின் தொழில் பக்தி!

கட்டுரை 7-Sep-2017 10:15 AM IST Chandru கருத்துக்கள்

திரைப்படங்களில் தயாரிப்பாளர்களின் கையும், நடிகர்களின் ஆதிக்கமும் ஓங்கியிருந்த காலகட்டத்தில் அந்த திரைப்படத்தின் மிக முக்கியமான நட்சத்திரம் இயக்குநர்தான் என்கிற ஆரோக்கியமான மாற்றத்தை அரங்கேற்றியவர் இயக்குநர் ஸ்ரீதர். இவரின் வருகைக்குப் பிறகுதான் சினிமாவில் இளமை துள்ளும் காதல் படங்கள் வெளிவர ஆரம்பித்தன. எதிர்பாராதது, அமரதீபம், உத்தமபுத்திரன், ரத்த பாசம் என படங்களுக்கு கதை, வசனம் எழுதிக் கொண்டிருந்த ஸ்ரீதர் ‘கல்யாணப்பரிசு’ படத்தின் மூலம் இயக்குநராக அவதாரமெடுத்தார். எம்.ஜி.ஆர், சிவாஜியை படங்களை மட்டுமல்ல, 1978-ல் ரஜினி, கமல் என வளர்ந்து வரும் இரு துருவங்களை இணைத்து ‘இளமை ஊஞ்சலாடுகிறது’ எனும் சூப்பர் ஹிட் படத்தைக் கொடுத்தவர். பல ஆண்டுகள் வெற்றிப்பட இயக்குனராக ஸ்ரீதர் வலம் வந்ததற்கு முக்கிய காரணம் அவரின் தொழில் பக்தியும், தயாரிப்பாளர்களின் பணத்தை விரையம் செய்யக்கூடாது என்ற நல்ல எண்ணமும்.

1968-ல் சிவாஜி கணேசனை வைத்து இயக்கிய ‘சிவந்த மண்’ படத்திற்காக பாரீஸ் சென்றிந்தபோது இங்கே தமிழகத்தில் ஸ்ரீதரின் தாயார் காலமாகிவிட்டார். ஆனால், திட்டமிட்டபடி காட்சிகளை எடுக்க வேண்டியிருந்ததாலும் காட்சித் தொடர்புகள் சிதறிப் போய்விடக்கூடாது என்பதற்காகவும் தன் தாயாரின் சவ அடக்கத்தில்கூட கலந்துகொள்ளாமல் காட்சிகளைப் படம் பிடித்தார் இயக்குநர் ஸ்ரீதர். தன் சுயநலத்திற்காக மற்றவரின் பணத்தையும் உழைப்பையும் என்றுமே அவர் வீணடித்ததில்லை.

#Sridhar #AmaraDeepam #Uthamaputhiran #RaththaPaasam #MGR #SivajiGanesan #SivandhaMann

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஒரு குப்பைக் கதை - ட்ரைலர்


;