சுசிகணேசன் இயக்கத்தில் 2006-ல் வெளியாகி வெற்றிபெற்ற படம் ‘திருட்டுப் பயலே’. கிட்டத்தட்ட 11 ஆண்டுகள் கழித்து இந்த படத்தின் இரண்டாம் பாகமாக ‘திருட்டுப் பயலே-2’வை இயக்கியுள்ளார் சுசிகணேசன். முதல் பாகத்தில் நடித்த எந்த நடிகர்களையும் இரண்டாம் பாகத்தில் நடிக்க வைக்காமல் பாபி சிம்ஹா, அமலா பால், பிரசன்னா முதலானோரை நடிக்க வைத்து இந்த இரண்டாம் பாகத்தை இயக்கியுள்ளார் சுசி கணேசன். வித்யாசாகர் இசை அமைக்கும் இந்த படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியானதை தொடர்ந்து, இப்படத்தை விரைவில் வெளியிடுவதற்கான வேலைகளும் தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் இப்படத்தின் சென்சார் காட்சியும் நடைபெற்றது. ‘திருட்டுப் பயலே-2’வை பார்த்த சென்சார் குழுவினர் படத்திற்கு ‘U/A’ சர்டிஃபிக்கெட் வழங்கியிருக்கிறார்கள். ‘திருட்டுப் பயலே’ முதல் பாகம் சென்சாரில் ‘A’ சர்டிஃபிக்கெட் தான் பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. முதல் பாகத்தை தயாரித்த ‘ஏ.ஜி.எஸ்.என்டர்டெயின்மென்ட்’ நிறுவனவே இரண்டாம் பாகத்தையும் தயாரித்துள்ளது.
#Thiruttupayale2 #BobbySimha #AmalaPaul #Prasanna #AGSEntertainment #Susiganesan #Vidyasagar
‘தெறி’, ‘மெர்சல்’ ஆகிய படங்களை தொடர்ந்து அட்லியும், விஜய்யும் மூன்றாவது முறையாக இணையும் ‘விஜய்-63’...
பாபி சிம்ஹா, ரம்யா நம்பீசன், மதுபாலா, சதீஷ் ஆகியோர் நடிப்பில் ‘அக்னிதேவ்’ என்ற பெயரில் ஒரு படம்...
அட்லி இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக நடிக்கும் ‘விஜய் 63’ படத்தின் ஷூட்டிங் விரைவில் ஆரம்பமாக...