சென்னையில் மீண்டும் துவங்கியது ‘காலா’ படப்பிடிப்பு!

சினிமா வேலைநிறுத்தம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ‘காலா’ படப்பிடிப்பு மீண்டும் துவங்கியது!

செய்திகள் 13-Sep-2017 1:17 PM IST VRC கருத்துக்கள்

கடந்த சில நாட்களாக தமிழ் திரையுலகில் நடந்து வந்த FEFSI வேலை நிறுத்தம் நேற்று இரவு வாபஸ் பெறப்பட்டது. இதனை தொடர்ந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சில படங்களின் படப்பிடிப்பு இன்று முதல் மீண்டும் துவங்கியுள்ளது. அதில் முக்கியமான படம் ரஜினி நடிக்கும் ‘காலா’. தனுஷின் ‘வுண்டர் பார் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்காக சென்னையில் மும்பை தாராவி போன்ற மிகப் பிரம்மாண்டமான செட் அமைக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே இந்த செட்டில் பல காட்சிகளை படமாக்கிய இயக்குனர் ரஞ்சித், இன்று முதல் மீண்டும் இந்த செட்டில் படப்பிடிப்பை துவங்கியுள்ளார். இந்த படப்பிடிப்பில் ரஜினிகாந்த் கலந்து கொண்டு இப்போது நடித்து வருகிறார். இந்த படப்பிடிப்பு தொடர்ந்து பல நாட்கள் நடக்கவிருக்கிறது என்பதை படக்குழுவினர் தெரிவித்துள்ளார்கள்.

#Kaala #Rajinikanth #Ranjith #WunderbarFilms #Dhanush #Kabali #Superstar #FEFSI

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

2 . 0 டீஸர்


;