விஜய்சேபதிக்கு மேக்அப் போடும் ஆஸ்கர் அவார்டு வின்னர்!

விஜய்சேதுபதியின் ‘சீதக்காதி’ படத்திற்காக ஆஸ்கர் வென்ற ஒப்பனைக் கலைஞரிடம் பேச்சுவார்த்தை!

செய்திகள் 15-Sep-2017 10:47 AM IST Chandru கருத்துக்கள்

‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தின் ஷில்பா கெட்அப்பிலிருந்தே இன்னும் விஜய்சேதுபதி ரசிகர்கள் வெளியேவரவில்லை. அதற்குள்ளாக விஜய்சேதுபதியின் அடுத்த கெட்அப் பற்றிய செய்தி தற்போது ஹாட் டாபிக் ஆகியிருக்கிறது. ஆம்... ‘சீதக்காதி’ படத்திற்காக மூன்றுவிதமான வெவ்வேறு வயதுடைய தோற்றங்களில் நடிக்கிறார் விஜய்சேதுபதி. அய்யா என்ற நாடக மேடைக் கலைஞரின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு வரும் இப்படத்தில் 75, 50 மற்றும் 30 வயதுடைய மூன்றுவிதமான தோற்றங்களில் நடிக்கிறாராம் விஜய்சேதுபதி.

அந்த 75 வயது கேரக்டருக்கான மேக்அப்பிற்காக லாஸ் ஏஞ்சல்ஸ் சென்று ஹாலிவுட் மேக்அப் கலைஞர் ஒருவரை சந்திக்கவிருக்கிறாராம் விஜய்சேதுபதி. அவர் வேறு யாருமல்ல, ‘மிசஸ் டவுட்ஃபயர்’, ‘தி க்யூரியஸ் கேஸ் ஆஃப் பெஞ்சமின் பட்டன்’, ‘டிராகுலா’ போன்ற ஹாலிவுட் படங்களுக்காக ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ள கிரேக் கேனம் தான். இவர் ஷாருக்கானின் ‘ஃபேன்’ மற்றும் ‘கபூர் அன்ட் சன்ஸ்’ போன்ற ஹிந்தி படங்களுக்கும் மேக்அப் கலைஞராக பணியாற்றியுள்ளார்.

விஜய்சேதுபதியின் 25வது படமாக உருவாகும் ‘சீதக்காதி’யை இயக்குபவர் ‘நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோம்’ புகழ் பாலாஜி தரணீதரன் என்பது குறிப்பிடத்தக்கது.

#VijaySethupathi #SuperDeluxe #Seethakathi #Shilpa #ThiyagarajanKumaraja #YuvanShankarRaja #AneethiKathaikal

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சிந்துபாத் ட்ரைலர்


;