ஸ்பைடர் - டிரைலர் விமர்சனம்

ஸ்பைடர் - டிரைலர் விமர்சனம்

கட்டுரை 15-Sep-2017 11:47 AM IST Chandru கருத்துக்கள்

கிட்டத்தட்ட இரண்டு நிமிடங்கள் (1.53) ஓடும் ‘ஸ்பைடர்’ டிரைலரைப் பார்த்ததும் தோன்றிய முதல் விஷயம் இதுதான்... ரசிகர்களுக்கு எந்த குழப்பத்தையும் ஏற்படுத்தாமல் நேரடியாக இப்படத்தின் கதை இதுதான், இந்த வேலையைத்தான் ஹீரோ செய்து கொண்டிருக்கிறார், இவர்தான் வில்லன், ஹீரோ எப்படி வில்லனின் சதித்திட்டங்களை முறியடிக்கிறார் என்பதே படத்தின் திரைக்கதை என தைரியமாக டிரைலரில் விளக்கிவிட்டார் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ். இந்த தைரியத்திற்காகவே முதலில் அவருக்கு பாராட்டுக்கள்.

ஏற்கெனவே வெளிவந்த டீஸரின் பெரிய வெர்ஷன்தான் இந்த டிரைலர். அந்த டீஸரில் எந்த காட்சிகளிலெல்லாம் நமக்கு சிறு சிறு சஸ்பென்ஸ் இருந்ததோ, அதையெல்லாம் ஒளிவுமறைவில்லாமல் இந்த டிலைரில் வெளிச்சம் போட்டுக்காட்டியிருக்கிறது ‘ஸ்பைடர்’ டீம். காதல், காமெடி, ஆக்ஷன், சென்டிமென்ட் என எல்லாம் கலந்த கலவைதான் ‘ஸ்பைடர்’ படம் என்பதை டிரைலர் மூலம் ஆணித்தரமாக நிறுவியிருக்கிறார்கள். முருகதாஸ் படங்களைப் பொறுத்தவரை ஒரு விஷயம் தெளிவாகக் கையாளப்படும்... அது, ஹீரோவுக்கு இணையாக வில்லனின் கதாபாத்திரமும் படைக்கப்பட்டிருக்கும். இந்த ‘ஸ்பைடர்’ படத்தின் எஸ்.ஜே.சூர்யா கேரக்டரும் அதற்கு விதிவிலக்கல்ல என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது இந்த டிரைலர். நிச்சயமாக தமிழ் சினிமாவின் முக்கிய வில்லன்கள் பட்டியலில் எஸ்.ஜே.சூர்யாவுக்கும் இடம் கிடைக்கும் எனத் தெரிகிறது.

ஹீரோயின் ரகுல் ப்ரீத் சிங்கிற்கு டீஸரில் பெரிய ஷாட்ஸ் எதுவும் வைக்கப்படவில்லை. அந்தக்குறையை இந்த டிரைலர் நிவர்த்தி செய்திருக்கிறது. அதேபோல் பரத்தும் ஒரு ஷாட்டில் தோன்றி மறைகிறார். ஆர்.ஜே.பாலாஜிக்கு படத்தில் காமெடி காட்சிகள் இருக்குமா? என்ற சந்தேகம் இந்த டிரைலரிலும் தொடர்கிறது. காரணம், அவருக்கான ஒரு டயலாக் கூட டிரைலரிலும் இடம்பெறவில்லை.

டெக்னிக்கலாக நிச்சயம் ‘ஸ்பைடர்’ பெரிதாகக் கவரும் என்ற நம்பிக்கை இந்த டிரைலரிலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நாயகன் செய்யும் வேலை முழுக்க முழுக்க கம்ப்யூட்டர் டெக்னாலஜி சம்பந்தப்பட்டது என்பதோடு, வில்லனின் சதித்திட்டங்களுக்குப் பின்னணியிலும் டெக்னாலஜி யுக்திகள் பயன்படுத்தப்பட்டிருக்கும் என்பதும் தெரிகிறது.

எல்லாம் சரிதான்... இதுதான் இப்படம் என தெளிவாக விளக்கிவிட்டார் ஏ.ஆர்.முருகதாஸ். இதையும் தாண்டி படத்தில் என்னென்ன சஸ்பென்ஸ் முடிச்சுகள் இருக்கும், முழுப்படத்தையும் எப்படி சுவாரஸ்யப்படுத்தப் போகிறார்கள் என்பதே ‘ஸ்பைடர்’ டீம் முன் நிற்கும் கேள்விகள். ஆனால், நிச்சயமாக திரையரங்குகளில் ஏ.ஆர்.முருகதாஸ் ரசிகர்களை ஆச்சரியப்படுத்துவார் என நம்புவோம்.#SPYDER #MaheshBabu #ARMurugadoss #RakulPreetSingh #HarrisJayaraj #SathoshSivan #LycaProduction

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

துருவ நட்சத்திரம் டீஸர் - 3


;