‘துப்பறிவாளன்-2’ விஷால் அறிவிப்பு!

‘சண்டக்கோழி’யை தொடர்ந்து ‘துப்பறிவாளன்’ இரண்டாம் பாகத்திலும் நடிக்கிறார் விஷால்!

செய்திகள் 16-Sep-2017 11:16 AM IST VRC கருத்துக்கள்

மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்து நேற்று முன்தினம் (14-9-17) வெளியான படம் ‘துப்பறிவாளன்’. விஷால் தயாரித்து நடித்த இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிப் படமாக அமைந்துள்ளதை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரித்து நடிக்க முடிவு செய்துள்ளர் விஷால். நேற்று மலேசியாவில் நடைபெற்ற ‘துப்பறிவாளன்’ படம் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சியில் இதனை தெரிவித்துள்ளார் விஷால். ஏற்கெனவே விஷால் நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற ‘சண்டக்கோழி’ படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கவிருக்கும் விஷால், அடுத்து ‘துப்பறிவாளன்’ இரண்டாம் பாகத்திலும் நடிக்கவிருப்பது அவரது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சி தரும் செய்தியாகும்.

#Thupparivaalan #Thupparivalan2 #Vishal #Sandaikozhi2 #TFPC

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஆக்‌ஷன் ட்ரைலர்


;