தனுஷின் இன்னொரு ஹாலிவுட் படம்!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் முழுக்க முழுக்க ஹாலிவுட் ஸ்டைலில் படமாகிறதாம்

செய்திகள் 21-Sep-2017 11:04 AM IST Chandru கருத்துக்கள்

‘இறைவி’ முடித்த கையோடு தனுஷ் படத்தை இயக்கப்போவதாக கார்த்திக் சுப்புராஜ் அதிகாரபூர்வமாக அறிவித்தார். ஆனால், அறிவிப்போடு அப்படம் பற்றிய வேறெந்த தகவலும் வெளிவரவில்லை. தனுஷும் வடசென்னை, எனை நோக்கிப் பாயும் தோட்டா, விஐபி 2 படங்களில் பிஸியாகிவிட்டார். கார்த்திக் சுப்புராஜும் பிரபுதேவாவை வைத்து ‘மெர்குரி’ படத்தை எடுக்கத் துவங்கிவிட்டார். 2016ஆம் ஆண்டு ஏப்ரலில் அறிவிக்கப்பட்ட இப்படம் பற்றி இப்போது சமீபத்திய பேட்டி ஒன்றில் குறிப்பிட்டிருக்கிறார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்.

இப்படம் முழுக்க முழுக்க அமெரிக்காவில் படமாக்கப்படவிருக்கிறதாம். அதோடு, இப்படத்தை எடுக்க நிறைய நாட்கள் ஆகும் என்பதாலேயே, அதற்கு முன்பு தனுஷும் தன் கைவசமுள்ள படங்களை முடிக்கட்டும், தானும் அதற்கு முன்பாக ‘மெர்குரி’ படத்தை முடித்துவிடலாம் என்பதால்தான் அப்படத்தை தள்ளி வைத்தாராம் கார்த்திக் சுப்புராஜ். அதோடு படத்தில் ஹாலிவுட் நடிகர் ஒருவரும் நடிக்கவிருக்கிறாராம். கேங்ஸ்டர் ஆக்ஷன் த்ரில்லராக உருவாகும் இப்படத்தில் உலக அளவில் பேசப்படும் ஒரு விஷயத்தைப் பற்றிய பதிவும் இருக்கும் என அந்த பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார் கார்த்திக். 2018ல் இப்படத்திற்கான படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கெனவே ‘தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் தி ஃபகிர்’ என்ற ஹாலிவுட் படத்தில் தனுஷ் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

#Dhanush #KarthikSubburaj #Iraivi #VadaChennai #EnaiNokkiPayumThotta #VIP2 #Mercury

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வடசென்னை கதாபாத்திரம் அறிமுகம் வீடியோ


;