‘மெர்சல்’ - டீஸர் விமர்சனம்

‘மெர்சல்’ - டீஸர் விமர்சனம்

கட்டுரை 21-Sep-2017 6:53 PM IST Chandru கருத்துக்கள்

உண்மையிலேயே 75 வினாடிகளையும் விஜய் ரசிகர்கள் கொண்டாடுவதற்கென்றே ‘மெர்சல்’ டீஸராக உருவாக்கியிருக்கிறார் அட்லி. ஏ.ஆர்.ரஹ்மானின் மேஜிக் இசையோடு ஒரு இளமைக்கூட்டணி கைகோர்த்து டீஸரை அற்புதமாக உருவாக்கியிருக்கிறார்கள். டீஸர் முழுக்க இன்டர்நேஷனல் இசையை படறவிட்டிருக்கிறார் ரஹ்மான். படத்திற்கு படம் அட்லியின் டைரக்ஷன் மெச்சூரிட்டியும், டெக்னிக்கல் விஷயங்களைப் பயன்படுத்தும் அறிவும் உயர்ந்துகொண்டே செல்வதை ‘மெர்சல்’ டீஸரில் உணர முடிகிறது. தமிழன் விஜய்யையும், இன்டர்நேஷனல் மெஜிசியன் விஜய்யையும் தனித்தனியாக பிரித்துப் பார்க்க முடியாதபடி எடிட்டிங்கால் ஆச்சரியப்படுத்தியிருக்கிறார்கள். இரண்டு விஜய்களின் அதிரடி ஆக்ஷன் காட்சிகளாலேயே இந்த டீஸரை நிரப்பித்தள்ளியிருக்கிறார்கள். டீஸரில் இடம்பெற்றிருக்கும் ‘‘நீ பற்ற வைத்த நெருப்பு ஒன்று பற்றி எரிய உனைக் கேட்கும்...! நீ விதைத்த விதையெல்லாம்... உன்னை அறுக்க காத்திருக்கும்..!’’ வசனம் இனிவரும் காலங்களில் விஜய் ரசிகர்களால் அதிகமாக உச்சரிக்கப்படும் வசனமாக இருக்கும்.

விஜய்யைத் தவிர வேறு யாரையும் இந்த டீஸரில் பெரிதாக காட்டாமல் சர்ப்ரைஸ் வைத்திருக்கிறார் அட்லி. காஜல், சமந்தா, நிதயாமேனன், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பிரபலங்களின் கேரக்டர்கள் பற்றி அனேகமாக டிரைலரில்தான் வெளிப்படுத்துவார்கள் எனத் தெரிகிறது. அதனால் இந்த டீஸர் முழுக்க முழுக்க விஜய்யை மட்டுமே முன்னிறுத்தப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த டீஸருக்கான எடிட்டிங்கை பொறுத்தவரை ரூபனை பாராட்டும் அதேவேளையில், அவரின் டீஸர் ‘கட்’ அனைத்தும் ஒரே பேட்டனாக இருப்பதுபோன்ற உணர்வைத் தருவையும் குறிப்பிட வேண்டியிருக்கிறது. குறிப்பாக சமீபத்தில் வெளிவந்த ‘விவேகம்’ டீஸரின் பேட்டனையே இந்த ‘மெர்சல்’ டீஸரும் நினைவுபடுத்துவதையும் மறுப்பதற்கில்லை.

‘கத்தி’ படத்தில் காயின் ஃபைட் ரசிகர்களிடம் எப்படிப்பட்ட வரவேற்பு கிடைத்ததோ, அதைப்போன்று ‘மெர்சல்’ படத்தில் இடம்பெறும் ‘கார்ட்ஸ் ஃபைட்’ மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த டீஸரை அந்த ‘கார்ட்ஸ் ஃபைட்’ காட்சிகளோடு முடித்திருப்பது சிறப்பு.

தீபாவளி ரிலீஸ் என அதிகாரபூர்வமாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுவிட்டாலும், இந்த டீஸரில் ‘பெஸ்டிவல் ஸுன்’ என்று மட்டுமே அறிவித்திருக்கிறார்கள்.#Mersal #Vijay #Samantha #Kajal #Atlee #NithyaMenen #ARRahman #SriThenandalFilms

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சர்க்கார் டீஸர்


;