அக்டோபரில் வெளியாகும் விக்ரமின் ‘10’

தெலுங்கில் ‘10’ என்ற பெயரில் வெளியாகும் விக்ரம், சமந்தா நடித்த பத்து எண்றதுக்குள்ள

செய்திகள் 27-Sep-2017 3:07 PM IST VRC கருத்துக்கள்

விஜய்மில்டன் இயக்கத்தில் விக்ரம், சமந்தா, சார்மி, பசுபதி முதலானோர் நடிப்பில் வெளியான படம் ‘பத்து எண்றதுக்குள்ள’. ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் 2015 அக்டோபர் மாதம் வெளியான இப்படம் தமிழ் ரசிகர்களிடம் எதிர்பார்த்த வரவேற்பு பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் தமிழில் வெளியாகி கிட்டத்தட்ட 2 ஆண்டுகளான நிலையில் இந்த படம் தெலுங்கில் ‘10’ என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகவுள்ளது. ‘ஸ்ரீசுப்பிரமணியேஸ்வரா சினி கிரியேஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் எம்.சுப்பாரெட்டி மற்றும் ராமராவ் சிந்தப்பள்ளி ஆகியோர் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை அடுத்த (அக்டோபர்) மாதம் வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள். விக்ரம், சம்ந்தா முதலானோருக்கு ஆந்திராவிலும் நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

#10Endrathukulla #Vikram #Samantha #VijayMilton #DImman #FoxStarStudios

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஆதித்ய வர்மா ட்ரைலர்


;