கருப்பன் - விமர்சனம்

குடும்பங்கள் கொண்டாடும் கருப்பன்

விமர்சனம் 29-Sep-2017 3:45 PM IST Top 10 கருத்துக்கள்

Direction : R. Panneerselvam
Production : Shri Sai Raam Creations
Starring : Vijay Sethupathi, Bobby Simha, Tanya, Pasupathi, Thambi Ramaiah
Music : D. Imman
Cinematography : K. A. Sakthivel
Editing : V. T. Vijayan

ஜல்லிக்கட்டு பின்னணியோடதான் ‘கருப்பன்’ ஃபர்ஸ்ட்லுக்கே ரிலீஸ் பண்ணாங்க.... அப்படின்னா... ‘கருப்பன்’ ஜல்லிக்கட்டு பத்தின படமா?

ஜல்லிக்கட்டு சம்பந்தப்பட்ட படம்லா இல்ல. ஆனா, ஜல்லிக்கட்டுல ஆரம்பிக்கிற படத்தோட கதை அடுத்த ஜல்லிக்கட்டுக்குள்ள முடிக்கிற மாதிரி திரைக்கதை அமைச்சிருக்காங்க. பசுபதியோட மாட்டை அடக்கி அவரோட தங்கச்சி தான்யாவை கல்யாணம் பண்றாரு விஜய்சேதுபதி. இதுனால, சின்ன வயசிலயிருந்தே தான்யாவை ஒருதலையா காதலிக்கிற அவரோட முறைமாமன் பாபி சிம்ஹா உச்சபட்ச ‘டென்ஷன்’ ஆகுறாரு. வில்லன் டென்ஷன் ஆனா என்ன பண்ணுவாரு... அதே தான்... சத்தமில்லாம விஜய்சேதுபதியோட வாழ்க்கைக்கு கொடைச்சல் குடுக்குறாரு. இதுனால, பசுபதிக்கும் விஜய்சேதுபதிக்கும் முட்டிக்குது. பிறகென்ன... வழக்கமா தமிழ் சினிமால என்ன நடக்குமே அதுதான் ‘கருப்பன்’லயும் நடக்குது!

காலம் காலமா பார்த்துப் பழக்கப்பட்ட கதை மாதிரி இருக்கே... அப்படினா படம் போரடிக்கும் போலயே...?

அதுதான் இல்ல... கதையா பார்த்தா ரொம்ப பழசுதான். ஆனா, இந்த கதைய வச்சுக்கிட்டு ஒரு சுவாரஸ்யமான படம் பண்ணிருக்காரு ‘ரேணிகுண்டா’, ‘18 வயசு’, படங்களோட இயக்குனர் பன்னீர் செல்வம். குறிப்பா படத்துல வர்ற ஒவ்வொரு கேரக்டரையும் ரொம்ப இயல்பா வடிவமைச்சிருக்காரு. ஆக்ஷன், சென்டிமென்ட், கணவன் மனைவிக்குள்ள இருக்குற அழகான லவ், அடிதடி, உறுத்தாத காமெடின்னு படம் எந்த இடத்துலயும் போரடிக்காத மாதிரி திரைக்கதை பண்ணிருக்காங்க. படத்துல இருக்கிற ஒரே பிரச்சனை, நடுவுல நடுவுல பாடல் வர்றதுதான். மத்தபடி எந்த சீன்லயும் படம் தொய்வடையவே இல்ல.

மாடுபிடி வீரரா விஜய்சேதுபதி... வில்லனா பாபி சிம்ஹா, கிராமத்துப் பெண்ணா தான்யா... இவங்கள்லாம் எப்படி நடிச்சிருக்காங்க...?

விஜய்சேதுபதிக்கு எந்த கேரக்டர் கொடுத்தாலும் மனுசன் மிரட்டி தள்ளிடுறாரு. ரூரல் பேக்ட்ராப்ல ஏற்கெனவே ‘தர்மதுரை’ படத்துல அதகளம் பண்ணினா விஜய்சேதுபதி, இந்தப் படத்துலயும் அத தக்க வச்சிருக்காரு. ‘கருப்பன்’ மூலமா தனக்கான பி அன்ட் சி ஆடியன்ஸோட எண்ணிக்கையை கணிசமா உயர்த்தி டுவாருன்னு தோணுது. ‘பிருந்தாவனம்’ படத்துல ஊட்டிப் பொண்ணா மாடன் ட்ரெஸ்ஸுல கலக்கின தான்யா, இந்தப் படத்துல சேலை கட்டி அசத்தியிருக்காங்க. கிராமத்துக்கதைனால ஹீரோயினுக்கும் முக்கியத்துவம் இருக்கும். நிச்சயமா தான்யாவுக்கு பேர் வாங்கிக்கொடுக்கிற படமா கருப்பன் அமைஞ்சிருக்கு. அவருக்கும் பசுபதிக்குமான் அண்ணன் தங்கச்சி சென்டிமென்ட் ரொம்ப நல்லாவே ஒர்க்அவுட் ஆகியிருக்கு. ‘ஜிகர்தண்டா’ படத்துல அதிரடி தாதாவா நடிச்ச பாபி சிம்ஹா அதுக்கப்புறம் பெரிசா கவனம் பெறல. ஆனா, ‘கருப்பன்’ படத்துல அமைதியா நடிச்சு அசத்தியிருக்காரு. வழக்கமான வில்லன்கள் பண்ற வேலைதான்னாலும், பாபி சிம்ஹா தனித்து ஸ்கோர் பண்ணிருக்கார். இவங்க மூணு பேர் மட்டுமில்ல, படத்துல நடிச்சிருக்கிற மத்த பேரும் ரொம்ப நல்லாவே பண்ணிருக்காங்க. அடிதடி ஆளாவே பார்த்துப் பழகிப்போன பசுபதிய பாசமான அண்ணனா பார்க்கிறதுக்கு பாந்தமா இருக்கு. சிங்கம்புலியை வெறும் காமெடிக்கு மட்டும் யூஸ் பண்ணாம படத்தோட கதையிலயும் ஒரு சின்ன போர்ஷன் கொடுத்து பயன்படுத்திருக்காங்க. ‘பாண்டியநாடு’ ஷரத் லோஹித்ஷாவுக்கு வேற கேரக்டர் எதுனா யோசிங்கப்பா... படத்துல போரடிக்கிற ஒரே கேரக்டர் இவர் மட்டும்தான்.

ரேணிகுண்டா, 18 வயசு படங்கள் டெக்னிக்கலா பேசப்பட்டதே... ஆனா, ‘கருப்பன்’ ஒரு கிராமத்துப் படம்.... இதுல டெக்னிக்கல் விஷயங்கள் எப்படி அமைஞ்சிருக்கு?

சந்தேகமே வேணாம்.... டெக்னிக்கல் விஷயங்கள் இந்தப்படத்துக்கு பக்கபலமாதான் அமைஞ்சிருக்கு. ஒளிப்பதிவு மட்டுமில்ல எடிட்டிங், இமானோட பின்னணி இசைன்னு எல்லாமே படத்துல வர்ற சென்டிமென்ட், ஆக்ஷன் விஷயங்களுக்குத் தகுந்தமாதிரி சிறப்பா செயல்பட்டிருக்கு. குறிப்பா, படத்துல வர்ற ஆக்ஷன் காட்சிகள ரொம்ப சிறப்பா பண்ணிருக்காங்க. படத்தோட ஆரம்பத்துல வர்ற ஜல்லிக்கட்டு காட்சிகள் நிஜ ஜல்லிக்கட்டையே நம்ம கண்ணு முன்னாடி காட்டுற மாதிரி ரியலா இருக்கு. ஆர்ட் ஒர்க்கும் எந்த இடத்துலயும் தனிச்சு தெரியாம, இயல்பான கிராமத்து களத்தை பிரதிபலிச்சிருக்கு.

எல்லாம் நல்லதாதான் சொல்றீங்க... அப்படினா இந்த ஆயுதபூஜை ரிலீஸ் படங்கள்ல ‘கருப்பன்’தான் பாக்ஸ் ஆபீஸ் வின்னரா?

ஓபனிங்கா பார்த்தா ரிலீஸாகி இருக்கிற மூணு படத்துக்கும் ஆவரேஜ் ஓபனிங்தான். ஆனா, பி அன்ட் சி ஏரியாவுல பாக்ஸ் ஆபிஸ் வின்னரா மாறுறதுக்கு ‘கருப்பன்’ படத்துக்கு நிறைய சான்ஸ் இருக்கு. குறிப்பா, ஃபேமிலி ஆடியன்ஸை டார்க்கெட் பண்ணி ‘கருப்பன்’ படம் எடுக்கப்பட்டிருக்கிறதால... குடும்பங்கள் கொண்டாடும் வெற்றிப்படமா ‘கருப்பன்’ மாறினாலும் ஆச்சரியப்படுறதுக்கில்ல..!

ரேட்டிங் : 5/10

#KaruppanMovieReview #Karuppan #VijaySethupathi #BobbySimha #Tanya #Imman #Panneerselvam #AMRatnam

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

திருட்டுப்பயலே 2 - நீண்ட நான் பாடல்


;