செல்வராகவன் உதவியாளர் இயக்கும் படம்!

வட சென்னையில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து செல்வராகவன் உதவியாளர் இயக்கும் படம் ‘வாண்டு’

செய்திகள் 4-Oct-2017 4:20 PM IST VRC கருத்துக்கள்

இயக்குனர் செல்வராகவனிடம் உதவியாளராக பணிபுரிந்து அனுபவம் பெற்ற வாசன் ஷாஜி இயக்கும் படம் ‘வாண்டு’. இந்த படத்தின் கதை 1970-71 காலகட்டத்தில் வட சென்னையில் நடந்த STREET FIGHT-ல் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை மையமாக எழுதப்பட்டதாம். இந்த படத்தில் ‘தடையற தாக்க’, ‘கொம்பன்’ படங்களில் நடித்த மஹா காந்தி, ‘மெட்ராஸ்’ படத்தில் நடித்த ரமா, ‘தெறி’யில் நடித்த சாய் தீனா, ‘ரோமியோ ஜூலியட்’ படத்தில் நடித்த புவனேஸ்வரி, ’2.0’வில் நடித்துக்கொண்டிருக்கும் ரவிசங்கர் ஆகியோருடன் அறிமுக நடிகர்கள் சீனு, எஸ்.ஆர்.குணா, ஆல்வின் நடிக்க கதாநாயகியாக ஷிகா நடிக்கிறார்.

அறிமுக இசை அமைப்பாளர் நேசன் இசை அமைக்கும் இந்த படத்தின் ஒளிப்பதிவை ரமேஷ், வி.மகேந்திரன் ஆகியோர் கவனிக்கிறார்கள். இந்த படத்தை ‘எம்.எம்.பவர் சினி கிரியேஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் வாசன் ஷாஜி, டத்தோ என்.முனியாண்டி இருவரும் இணைந்து தயாரிக்கிறார்கள்.

#Vaandu #VashanShaji #MohanRajan #OmPrakash #Selvaraghavan

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அறம் - டிரைலர்


;