ஃப்ளாஷ்பேக் வியாழன் : முதல் படத்திலேயே மிகப்பெரிய சாதனை படைத்த இயக்குனர்!

இயக்குனர் ஆர்.சுந்தர்ராஜனும், நடிகர் மோகனும் இணைந்த ‘பயணங்கள் முடிவதில்லை’ படம் செய்த சாதனை!

கட்டுரை 5-Oct-2017 1:46 PM IST Chandru கருத்துக்கள்

‘வெற்றிகரமான 2வது வாரம்’ என போஸ்டர் அடித்துக் கொண்டாட வேண்டிய சூழலில் உள்ளது இன்றைய தமிழ் சினிமா. ஆனால், 80, 90களில் சர்வ சாதாரணமாக பெரும்பாலான படங்கள் நூறு நாட்களைக் கடந்தும் ஓடிக் கொண்டிருக்கும். அதிலும் ஒரு சில படங்கள் 200, 300 நாட்களையும் கடந்து வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிய வரலாறெல்லாம் உண்டு. அப்படியொரு வரலாற்றுச் சாதனையை தன் முதல் படத்திலேயே படைத்தவர் இயக்குனர் ஆர்.சுந்தர்ராஜன்.

1982ல் மோகன் நடிப்பில் வெளிவந்த ‘பயணங்கள் முடிவதில்லை’தான் அந்த சாதனைக்கு சொந்தமான திரைப்படம். இப்படத்தின் மூலம் ஆர்.சுந்தர்ராஜன் இயக்குனராக அறிமுகமானார். இப்படத்தின் வெற்றியில் இளையராஜாவின் சூப்பர்ஹிட் பாடல்களுக்கு மிகப்பெரிய பங்குண்டு. அதோடு, இந்தப்படம் மோகனின் சினிமா கேரியரிலும் 3வது முறையாக 300 நாட்களைக் கடந்து ஓடிய படமாகவும் இடம்பிடித்தது. இதற்கு முன்பு 1980ல் மகேந்திரன் இயக்கத்தில் மோகன் நடித்து வெளிவந்த ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’ படமும், 1981ல் வெளிவந்த ‘கிளிஞ்சல்கள்’ படமும் 300 நாட்களைக் கடந்து ஓடி சாதனை படைத்தது. ஹீரோவாக அறிமுகமாகி முதல் மூன்று வருடங்களிலும் 300 நாட்கள் ஓடி சாதனை படைத்த மூன்று படங்களைக் கொடுத்த ஒரே ஹீரோ மோகன் மட்டுமே. ‘பயணங்கள் முடிவதில்லை’ படத்திற்காக சிறந்த நடிகருக்கான ஃபிலிம் ஃபேர் விருதையும் வென்று சாதித்தார் மோகன். அவர் வாங்கிய ஒரே பெரிய விருதும் இதுமட்டுமே என்கிறார்கள்.#PayanangalMudivathillai #Mohan #PoornimaBhagyaraj #SVeShekher #RSundarrajan #Ilaiyaraaja #MotherlandPictures

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

காற்றின் மொழி டீஸர்


;