‘‘அழிக்க நினைச்சா ரெண்டா வருவேனே...!’’ - அதிரடிக்கும் ‘மெர்சல்’ வரிகள்

விஜய்யின் ‘மெர்சல்’ படத்திற்காக பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ள புதிய பாடல் வரிகள்

செய்திகள் 10-Oct-2017 10:57 AM IST Chandru கருத்துக்கள்

‘மெர்சல்’ படத்தின் மெஜிசியன் விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகளைப் பார்த்த பிறகு அந்தக் காட்சிகளின் பின்னணி இசைக்காக புதிய குறும் பாடல் ஒன்றை படத்தில் சேர்க்கவிருப்பதாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும், பாடலாசிரியர் விவேக்கும் முடிவு செய்திருப்பதாக கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. அந்தப் பாடல் எழுதப்பட்டு, அதனுடைய ரெக்காடிங்கும் ஏற்கெனவே முடிவடைந்துவிட்டது. ‘மெர்சல்’ தலைப்பு வழக்கின் மீதான தீர்ப்பு தேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனத்திற்கு சாதகமாக வந்ததையடுத்து, அந்த வெற்றியை குறிக்கும் பொருட்டு மேற்படி பாடலில் இடம்பெற்ற வரிகளை இரண்டினை ட்விட்டரில் பதிவேற்றியுள்ளார் பாடலாசிரியர் விவேக்.

‘‘தடையின் தடயம் உடைய உருக..
அழிக்க நெனச்சா, ரெண்டா வருவானே’’


இதுதான் அந்தப் பாடல் வரிகள். வரிகளுக்குள் இருக்கும் அர்த்தத்தைப் புரிந்துகொண்ட விஜய் ரசிகர்கள் பலரும், படத்தில் மூன்று விஜய் இருப்பதாக கருதி வருகிறார்கள். இதற்கான விடை வரும் 18ஆம் தேதி தெரிந்துவிடும்.

#Vijay #Mersal #SJSuriya #Samantha #Kajal #Vadivelu #Atlee #SriThenandalFilms #ARRahman #NithyaMenen

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

திமிரு புடிச்சவன் - மோஷன் போஸ்டர்


;