சினிமாவில் களமிறங்கும் வைகோ!

வேலுநாச்சியார் சரித்திரத்தை திரைப்படாமாக தயாரிக்கிறார் வைகோ!

செய்திகள் 10-Oct-2017 3:25 PM IST VRC கருத்துக்கள்

‘வேலுநாச்சியார்’ மேடை நாடகம் பல இடங்களீல் அரங்கேற்றப்பட்டு அனைவரிடமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நாடகத்தை தனது ‘கண்ணகி ஃபிலிம்ஸ்’ சார்பில் திரைப்படமாக்க தயாரிக்கிறார் வைகோ. இது வைகோ தயாரிக்கும் முதல் திரைபப்டமாகும். வேலு நாச்சியார் நாடகம் நேற்று மாலை சென்னை வாணிமகாலில் அரங்கேற்றப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் விஷால் நாசர், பொன்வண்ணன் உட்பட பல பிரபலங்கள் கலந்துகொண்டனர். அப்போது நடிகர் விஷால் பேசும்போது

‘‘வைகோ அவர்கள் வேலு நாச்சியார் திரைப்படத்தை தயாரிப்பதற்காக அதை தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்ய வந்திருந்தார். அப்போது என்னை வேலு நாச்சியார் மேடை நாடகத்தை பார்க்க கண்டிப்பாக வரவேண்டும் என்று அழைத்தார். அதன்படி இங்கு வந்திருக்கிறேன். இந்த நாடகத்தில் நடித்த அனைவருக்கும் என் பாராட்டுக்கள். பிரிட்டிஷ் அரசருக்கு வரி கட்டுவதை எதிர்த்து வேலுநாச்சியார் போராடினார். இப்போது தமிழக அரசை கேளிக்கை வரியை ரத்து செய்ய வைக்க நாங்கள் போராடிக்கொண்டிருக்கிறோம். விரைவில் நிச்சயம் நல்ல ஒரு தீர்வு கிடைக்கும் என்று நம்புகிறோம்.. ‘வேலுநாச்சியார்’ சரித்திரத்தை பஅடமாக்க முன் வந்திருக்கும் வைகோ அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்’’ என்றார்.

வைகோ பேசும்போது, ‘‘தமிழர்களின் உயிர்க்கவியமான இமயமலை முதல் அலைகள் பொங்கி விளையாடும் கன்னியகுமாரி முனை வரை இந்த உபநிடத்திலே ஆதவன் அஸ்தமிக்காத எங்கள் பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் கட்டளை புரிந்து கொண்டிருந்த ஏகாதிபத்தியத்தை முதலில் வெற்றிக்கொண்டவர் வேலுநாச்சியார். நான் ஜான்சி இராணியை மதிக்கிறேன். காந்தியத்தை, நானா சாகிப்பை மதிக்கிறேன். அவர்கள் வாழ்வில் சொன்னதை நான் பெருமையாக நினைக்கிறேன்.

ஆனால் அவர்கள் பெற முடியாத வெற்றியை தென்னாட்டு சிவகங்கை அரசி அனைவரும் ஒன்று சேர்த்து வெற்றி பெற்ற வரலாற்றை, திருவள்ளுவரின் படத்தை தீட்டிய வேணுகோபால்சர்மா அவர்களின் மகன் ஸ்ரீராம் சர்மா ஆறரை ஆண்டுக்கு முன்னால் சந்தித்து பேசியபோது மெய் மறந்து போனேன்.

இந்த நாட்டிய நாடகத்தில் நீங்கள் வேலுநாச்சியாரை கண்டிர்கள். உணர்ச்சிகளின் கொந்தளிப்பாக நடிகர் திலகம் நமக்கு எப்படி வீரபாண்டிய கட்டபொம்மனாக காட்சி அளித்தாரோ அதைபோல சகோதரி மணிமேகலை சர்மா வேலுநாச்சியாராகவே இங்கு காட்சி அளித்தார். . வேலுநாச்சியார் திரைப்படத்தை தயாரிக்க வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் கனவு. அதை கண்ணகி பிலிம்ஸ் மூலம் தயாரிப்பதில் பெருமைபடுகிறேன்’’ என்றார் வைகோ.

இந்த பட தயாரிப்பு குறித்த கூடுதல் விவரங்கள் விரைவில் வெளியாகவிருக்கிறது.

#VeluNachiyaar #Vaiko #Vishal #Naaser #Ponvannan #Parthipan

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இரும்புத்திரை ட்ரைலர்


;