நகுலின் ‘செய்’ ரிலீஸ் ப்ளான்!

நகுலின் ‘செய்’ பட விநியோகத்தில் ஜாஸ் சினிமாஸ்!

செய்திகள் 10-Oct-2017 4:37 PM IST VRC கருத்துக்கள்

நகுல், பாலிவுட் நடிகை ஏஞ்சல், பிரகாஷ் ராஜ் உட்பட பலர் நடித்துள்ள படம் ‘செய்’. அறிமுக இயக்குனர் ராஜ் பாபு இயக்கியுள்ள இந்த படத்தின் அனைத்து வேலைகளும் முடிவடைந்துவிட்ட நிலையீல் இப்படத்தை விரைவில் வெளியிடுவதற்கான வேலைகளில் இறங்கியுள்ளனர் படக்குழுவினர். இந்நிலையில் இந்த படத்தின் சென்னை சிட்டி உரிமையை ஜாஸ் சினிமாஸ் நிறுவனம் கைபற்றியுள்ளதாக படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். பட ரிலீஸ் தேதி குறித்து படக்குழுவினரிடம் கேட்டபோது அடுத்த மாதம் (நவம்பர்) 10 அல்லது 17-ஆம் தேதி ‘செய்’ திரைக்கு வந்துவிடும் என்றார்கள். ‘தூங்கா நகரம்’, ‘சிகரம் தொடு’ படங்களின் ஒளிப்பதிவாளர் விஜய் உலகநாதன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு நிக்ஸ் லோபஸ் இசை அமைத்துள்ளார். துபாய் மற்றும் மும்பையில் செயல்பட்டு வரும் ‘ட்ரிப்பி டர்டில் புரொட்க்‌ஷன்ஸ் நிறுவனம் சார்பில் மன்னு என்பவர் தயாரிக்கும் முதல் தமிழ் திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

#Sei #Nakul #Anchal #RajBabu #Umesh #TrippuTurtlePresents #SeiReleaseDate

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

செய் ட்ரைலர்


;