30 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ‘மை டியர் லிசா’

விஜய் வசந்த் நடிக்கும் மை டியர் லிசா!

செய்திகள் 11-Oct-2017 6:06 PM IST VRC கருத்துக்கள்

வெங்கட் பிரபு இயக்கிய ‘சென்னை – 600028’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் விஜய் வசந்த். இந்த படத்தை தொடர்ந்து பல படங்களில் நடித்த விஜய் வசந்த் அடுத்து கதாநாயகனாக நடிக்கும் படம் ‘மை டியர் லிசா’. அறிமுக இயக்குனர் ரஞ்சன் கிருஷ்ணதேவன் இயக்கும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சற்று முன் வெளியானது. ஏற்கெனவே நிழல்கள் ரவி, மனோரமா, சாதனா முதலானோர் நடிப்பில் 1987-ல் ‘மை டியர் லிசா’ என்ற பெயரில் ஒரு ஹாரர் படம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இப்போது அதே பெயரில் விஜய் வசந்த் நடிப்பில் மற்றுமொரு ஹாரர் படமாக ‘மை டியர் லிசா’ உருவாகிறது. இசைக்கு டி.எம்.உதயகுமார், ஒளிப்பதிவுக்கு ஜெய்சுரேஷ் என கூட்டணி அமைத்துள்ள இந்த படத்தில் விஜய் வசந்துக்கு ஜோடியாக சாந்தினி நடிக்கிறார். ரமேஷ் ரெட்டி தயாரிக்கிறார்.

#MyDearLisa #VijayVasanth #RanjanKrishnadevan #Chennai28 #VenkatPrabhu

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வேலைக்காரன் - கருத்தவன்லாம் பாடல் வீடியோ


;