ஃபளாஷ்பேக் வியாழன் - நாடகக் காதலன் ஆர்.எஸ்.மனோகர்!

நாடகக் காதலன் ஆர்.எஸ்.மனோகர்!

கட்டுரை 12-Oct-2017 12:39 PM IST Chandru கருத்துக்கள்

தமிழ்த் திரையுலகில் வில்லனாக அறிமுகமாகி, பிறகு கதாநாயகன் அந்தஸ்துக்கு உயர்ந்தவர்கள் பலர் உண்டு. ஆனால் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகி பத்துப் பதினைந்து படங்களுக்குப் பிறகு வில்லனாக மாறி, பின்னர் தமிழ்சினிமாவின் மிகச்சிறந்த வில்லன் என்ற பெயரை அழுத்தமாக முத்திரை பதித்து சென்றவர்களில் ‘நாடகக் காவலர்’ என போற்றப்படும் ஆர்.எஸ்.மனோகர் முக்கியமானவர்.

சினிமா உலகில் பிஸியாக இருந்தாலும், நாடகம் நடத்துவதில் தொடர்ந்து தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர் ஆர்.எஸ்.மனோகர். மனோகர் நாடகங்கள் என்றாலே அதில் பிரம்மாண்டம், வியக்கவைக்கும் தந்திரக்காட்சிகள் என அனைத்தும் இருக்கும். மேடையில் மழை பெய்யும். வாளால் வெட்டப்பட்ட தலை துண்டாக எகிறிச் சென்று விழும். புஷ்பக விமானம் மேடையிலேயே பறந்து செல்லும். அன்றைக்கு இருந்த தொழில்நுட்ப சாதனங்களைப் பயன்படுத்தி இப்படி பல அற்புதங்களை நிகழ்த்தி ஏகத்திற்கும் மக்களைக் கிறங்கடித்த ஆர்.எஸ்.மனோகர், எம்.ஜி.ஆர் வழங்கிய நாடக காவலர் உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட பட்டங்களையும் பெற்றுள்ளார்.

ஒரு சமயம், சேலத்தில் ஏழு நாட்கள் தொடர்ந்து நாடகம் நடத்தவேண்டிய சூழ்நிலை. அதே நேரம் சென்னையில் எம்.ஜி.ஆர் பட ஷூட்டிங்கிலும் கலந்துகொள்ள வேண்டும். மனோகர் எப்படி சமாளித்தார் தெரியுமா? தினமும் காலை ஏழு மணிக்குத் தொடங்கி பகல் 12மணி வரை சென்னையில் ஷூட்டிங்கில் இருப்பார். பிறகு காரில் புறப்பட்டு மாலையில் சேலம் போய்ச் சேர்ந்து, நாடகத்தில் நடித்துவிட்டு, இரவே சேலத்திலிருந்து மீண்டும் புறப்பட்டு காலையில் சென்னை வந்து படப்பிடிப்பில் கலந்துகொள்வார். நாடக்தின்மீதான காதல், தொழிலின் மீதான பக்தி இந்த இரண்டும்தான் ஆர்.எஸ்.மனோகரின் இந்த அயராத உழைப்பிற்குக் காரணம்.

#RSManohar #MGR #Billa #Rajinikanth #ManaiviReady #ThrowbackThursday

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தெருவிளக்கு வீடியோ பாடல் - காலா


;