’வேலைக்காரன்’ விநியோக உரிமையை கைபற்றிய பிரபல நிறுவனம்!

சிவகார்த்திகேயனின் ‘வேலைக்காரன்’ சென்னை விநியோக உரிமையை கைபற்றிய எஸ்.பி.ஐ.சினிமாஸ்!

செய்திகள் 13-Oct-2017 10:38 AM IST VRC கருத்துக்கள்

மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, ஃபஹத் ஃபாசில், பிரகாஷ் ராஜ், சினேகா முதலானோ நடிப்பில் உருவாகி வரும் படம் வேலைக்காரன். ‘24 AM STUDIOS’ நிறுவனம் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிக்கும் இப்படத்தின் இறுதிகட்ட வேலைகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ‘வேலைக்காரன்’ கிருஸ்துமஸ் பண்டிகை விடுமுறையை முன்னிட்டு டிசம்பர் 22-ஆம் தேதி வெளியாகவிருப்பதால் படத்தின் வியாபார விஷயங்களும் சூடு பிடித்துள்ளன. இந்நிலையில் ‘வேலைக்காரன்’ படத்தின் சென்னை விநியோக உரிமைய பிரபல ‘SPI CINEMAS’ நிறுவனம் கைபற்றியுள்ளது. சிவகார்த்திகேயன் நடித்த ‘ரெமோ’ படத்தின் மூலம் தயாரிப்பு துறையில் களமிறங்கிய ‘24 AM STUDIOS’ நிறுவனத்தின் இரண்டாவது தயாரிப்பு, ‘தனி ஒருவன்’ படத்திற்கு பிறகு மோகன் ராஜா இயக்கும் படம் வேலைக்காரன் என்பதால் இப்படம் மீது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

#Velaikkaran #Sivakarthikeyan #MohanRaja #Nayanthara #24AMStudios #RDRaja #Anirudh #SPICinemas

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நீயும் நானும் அன்பே வீடியோ பாடல் - இமைக்க நொடிகள்


;