‘கேப்டன் பிரபாகரனு’க்கு முன்பே கேப்டனாக விஜயகாந்த் பிரபலமடைந்த படம்?

‘கேப்டன் பிரபாகரனு’க்கு முன்பே கேப்டனாக விஜயகாந்த் பிரபலமடைந்த படம்?

கட்டுரை 13-Oct-2017 11:30 AM IST Chandru கருத்துக்கள்

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை ‘கேப்டன்’ என்று சொன்னதும் எல்லோருக்கும் முதலில் ஞாபகத்துக்கு வருபவர் விஜயகாந்த் தான். சினிமாவில் மட்டுமில்ல, அரசியலிலும் இப்போதைய கேப்டன் விஜய்காந்த் மட்டுமே. ‘கேப்டன்’ என்கிற அடைமொழி அவரின் 100வது படமான ‘கேப்டன்’ பிரபாகரனு’க்குப் பிறகுதான் வந்தது என்றே பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் இந்தப் படத்திற்கு முன்பே விஜயகாந்த் ஒரு படத்தில் ‘கேப்டன்’ என அழைக்கப்பட்டிருக்கிறார். உண்மையைச் சொல்ல வேண்டுமானால், இந்தப் படம் வெளிவந்தது முதலே விஜயகாந்தை ‘கேப்டன்’ என அழைக்கத் தொடங்கிவிட்டனர் அவரது ரசிகர்கள்.

1988ஆம் ஆண்டு பி.ஆர்.தேவராஜ் இயக்கத்தில் வெளிவந்த படம் ‘செந்தூரப்பூவே’. ராம்கியும் நிரோஷாவும் ஹீரோ, ஹீரோயினாக நடித்த இந்தப் படத்தில் ‘கேப்டன் சுந்தரபாண்டியன்’ என்கிற முக்கியமான கேரக்டர் ஒன்றில் விஜயகாந்த் நடித்திருந்தார். இப்படத்தில் அவர் ஒரு மிலிட்டரி மேன். ஆனால், படத்தின் ஆரம்ப காட்சிகளில் இதை வெளிப்படுத்தியிருக்க மாட்டார்கள். ஒரு ஃப்ளாஷ்பேக்கிற்கு பின்பே விஜயகாந்த் ஒரு மிலிட்டரி கேப்டன் என்பது படத்தின் மற்ற கேரக்டர்களுக்குத் தெரிய வரும். இப்படத்தின் பரபரப்பான க்ளைமேக்ஸில் ராம்கி, நிரோஷா, சந்திரசேகர் ஆகியோர் ஓடும் ரயிலில் நின்றுகொண்டு விஜயகாந்த்தை ‘கேப்டன்... சீக்கிரம் வாங்க...’ என அழைத்துக் கொண்டே இருப்பார்கள்.

சில்வர் ஜூப்ளி வெற்றிப்படமாக அமைந்த ‘செந்தூரப்பூவே’வின் கேப்டன் சுந்தரபாண்டியன் கேரக்டர் ரசிகர்கள் மனதில் ஆழமாகப் பதிந்துபோகவே, அதன்பிறகு விஜயகாந்தை கேப்டன் என அழைக்கத் தொடங்கிவிட்டனர் அவரது ரசிகர்கள். ஆனால், ‘கேப்டன் பிரபாகரன்’ படம் வெளிவந்த பிறகுதான் ‘கேப்டன்’ என்ற அடைமொழி பட்டிதொட்டியெங்கும் பிரபலமடைந்ததையும் மறுப்பதற்கில்லை.

#Vijayakanth #Captain #Ramki #Nirosha #SenthooraPoove #CaptainPrabhakaran #ManojGyan #Devaraj #Sripriya #AnandRaj

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஆங்கில படம் - டிரைலர்


;