மீண்டும் இணையும் ‘இறைவி’ கூட்டணி!

புதிய படமொன்றில் மீண்டும் இணைகிறார்கள் கார்த்திக் சுப்புராஜும் நடிகர் எஸ்.ஜே.சூர்யாவும்!

செய்திகள் 2-Nov-2017 4:24 PM IST Chandru கருத்துக்கள்

ஹீரோவாக பல படங்களில் நடித்து தன் திறமையை வெளிப்படுத்தியிருந்தாலும், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்த ‘இறைவி’ படத்தில்தான் எஸ்.ஜே.சூர்யாவுக்குள் இருந்த முழுமையான நடிப்பை ரசிகர்கள் உணர்ந்து கொண்டார்கள். நடிகராக அப்படம் அவருக்கு பெரிய ‘பிரேக்’காக அமைய அதனைத் தொடர்ந்து ஸ்பைடர், மெர்சல், நெஞ்சம் மறப்பதில்லை, இறவாக்கலாம் என தற்போது பிஸியான நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில், மீண்டும் கார்த்திக் சுப்புராஜுடன் இணைகிறார் எஸ்.ஜே.சூர்யா. ஆனால், இம்முறை கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பாளராக மட்டுமே களம் காண்கிறார். அவரின் ஸ்டோன் பெஞ்ச் கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படமொன்றில் நடிக்க எஸ்.ஜே.சூர்யா ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரத்திலிருந்து தகவல் கிடைத்துள்ளது. இப்படத்தின் இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் பாபி சிம்ஹாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால், இப்போது அந்த கதாபாத்திரத்தில் நடிக்க ‘டிமான்டி காலனி’ படத்தில் நடித்த சனந்த்திடம் பேச்சுவார்த்தை நடக்கிறதாம். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பிரபுதேவா நடிக்கும் ‘மெர்குரி’ படத்திலும் சனந்த் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

விரைவில் இப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

#Iraivi #SJSuriya #KarthikSubburaj #StoneBenchCreations #Mersal #NenjamMarapathillai #Spyder

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மெர்குரி ட்ரைலர்


;