ஃப்ளாஷ்பேக் வியாழன் - ரஹ்மான், ராஜாவுக்கு முன்பே உலக அரங்கில் விருது வாங்கிய தமிழ் இசையமைப்பாளர்!

ரஹ்மான், ராஜாவுக்கு முன்பே உலக அரங்கில் விருது வாங்கிய தமிழ் இசையமைப்பாளர்!

கட்டுரை 2-Nov-2017 4:11 PM IST Chandru கருத்துக்கள்

தியாகராஜ பாகவதர் நடிப்பில் 1938ஆம் ஆண்டு வெளியான ‘சத்யசீலன்’ படம் மூலமாக தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜி.ராமநதான். எம்.ஜி.ஆர் நடித்த மதுரை வீரன், சிவாஜியின் உத்தம புத்திரன் உட்பட 80 படங்களுக்கும் மேலாக இசையமைத்துள்ள ஜி.ராமநாதன், மூன்று தீபாவளி கடந்து ஓடி சாதனை படைத்த ‘ஹரிதாஸ்’ படத்துக்கும் இசையமைத்துள்ளார்.

இந்தியாவைத் தாண்டிச் சென்று உலக அரங்கில் விருது பெற்ற இசையமைப்பாளர் என்றால் நமக்கு உடனே ஞாபகத்துக்கு வருபவர் ஆஸ்கர், கிராமி விருதுகளை வென்றுள்ள ஏ.ஆர்.ரஹ்மான்தான். இளையராஜாவும் கோல்டன் ரெமி அவார்டு மற்றும் உலகத்திரைப்பட விழாவில் விருதுகள் வாங்கியுள்ளார். ஆனால், இவர்களுக்கு முன்பே, அதுவும் இந்தியாவிலேயே முதன்முதலாக உலக அங்கீகாரம் பெற்ற இசையமைப்பாளராக சாதனை படைத்தவர் ஜி.ராமநாதன் என்பது பலருக்கும் தெரியாத விஷயம். 1960ஆம் ஆண்டு எகிப்து நாட்டின் கெய்ரோவில் நடைபெற்ற ஆசிய ஆப்ரிக்க திரைப்படவிழாவில், ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ படத்திற்காக சிறந்த இசையமைப்பாளர் விருதை வாங்கி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார் ஜி.ராமநதான். சிறந்த படத்துக்கான விருதையும் பெற்ற இப்படத்தில் நடித்த சிவாஜி கணேசன் சிறந்த நடிகருக்கான விருதையும் வாங்கியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

#GRamanathan #Sathiyaseelan #MGR #Sivaji #Haridas #ARRahman #Ilayaraja #MSViswanathan

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வீரசிவாஜி - டிரைலர்


;