‘டாவு’ அடிக்க வரும் ‘கயல்’ சந்திரன்!

’கயல்’ சந்திரன் நடிக்கும், ‘தில்லுக்கு துட்டு’ பட இயக்குனரின் ‘டாவு’

செய்திகள் 9-Nov-2017 1:22 PM IST VRC கருத்துக்கள்

‘தில்லுக்கு துட்டு’ படத்தை இயக்கிய ராம்பாலா அடுத்து இயக்கும் படத்திற்கு ’டாவு’ என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் கயல் சந்திரன் கதாநாயகனாக நடிக்கிறார். காதல், காமெடி கலந்த கதையாம் ‘டாவு’. இந்த படத்தை ‘Two Movie Buffs’ என்ற பட நிறுவனம் சார்பில் பி.எஸ்.ரகுநாதன் தயாரிக்கிறார். ‘கயல்’ சந்திரன் நடிப்பில் ரிலீசுக்கு தயாராகி வரும் ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’ படத் தயாரிப்பாளர்களில் ஒருவர் பி.எஸ்.ரகுநாதன் என்பது குறிப்பிடத்தக்கது. ‘டாவு’ படத்தில் ‘கயல்’ சந்திரனுடன் முனீஸ்காந்த், லிவிங்ஸ்டன், ஊர்வசி, மனோபாலா ஆகியோரும் நடிக்கிறார்கள். கதாநாயகி தேர்வு நடந்து வரும் இப்படத்திற்கு தீபக் குமார் பதி ஒளிப்பதிவு செய்கிறார். சந்தோஷ் தயாநிதி இசை அமைக்கிறார். கே.எல்.பிரவீன் படத்தொகுப்பு செய்கிறார். இந்த படத்தின் பூஜை இன்று காலை சென்னையில் நடைபெற்றது.



#KayalChandran #Daavu #ThilukkThuttu #Rambala #TwoMovieBuffs #Munishkanth #Manobala

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

திட்டம் போட்டு திருடுற கூட்டம் - டிரைலர்


;