மீண்டும் இணையும் ‘TIN’ கூட்டணி!

ரஜினியின் ‘2.0’ படத்தை தொடர்ந்து  ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் 3D தொழில்நுட்பத்தில் உருவாகும் படம்!

செய்திகள் 14-Nov-2017 10:39 AM IST VRC கருத்துக்கள்

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், ஆனந்தி, மனிஷா யாதவ் முதலானோர் நடிப்பில் வெளியாகி வசூல் குவித்த படம் ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’. இந்த படத்தை தொடர்ந்து சிம்பு நடிப்பில் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ என்ற படத்தை இயக்கினார் ஆதிக் ரவிச்சந்திரன். இந்த படத்தை தொடர்ந்து தனது மூன்றாவது படமாக ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் மீண்டும் ஒரு படத்தை இயக்கவிருக்கிறார் ஆதிக். இந்த படம் காதல் ஃபேண்டஸி திரைப்படமாக, 3D தொழில்நுட்பத்தில் உருவாகவிருக்கிறதாம். ‘அரண்மனை’ படத்தை தயாரித்த ‘விஷன் மீடியா’ தினேஷ் கார்த்திக் இந்த படத்தை தயாரிக்கவிருக்கிறார். இந்த படத்தில் சோனியா அகர்வாலும் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ரஜினி, ஷங்கர் கூட்டணியில் உருவாகி வரும் ‘2.0’ படத்தை தொடர்ந்து ‘3D’ தொழில்நுட்பத்தில் உருவாகும் இந்த படம் குறித்த அதிகாரபூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

#GVPrakshKumar #TrishaIllanaNayanthara #AdhikRavichandran #AAA #STR #SoniaAgarwal #2PointO #Rajini #Shankar

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மரண மட்ட padal


;