இளையராஜாவுடன் இணைந்த ஜி.வி.பிரகாஷ்!

‘நாச்சியார்‘ படத்திற்காக இளையராஜா இசையில் பாடிய ஜி.வி.பிரகாஷ்!

செய்திகள் 18-Nov-2017 10:39 AM IST VRC கருத்துக்கள்

பாலா இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், ஜோதிகா இணைந்து நடிக்கும் படம் ’நாச்சியார்’. இந்த படத்திற்கு இளையராஜா இசை அமைக்கிறார். ஏற்கெனவே பல பாடல்களை பாடியுள்ள ஜி.வி.பிரகாஷ், தான் நடிக்கும் ‘நாச்சியார்’ படத்திற்காக இளையராஜா இசையில் ஒரு பாடலை பாடியுள்ளார். ‘ஒன்னவிட்டா யாரும் இல்ல…’ என்று துவங்கும் இந்த பாடலை டாக்டர் தமிழச்சி தங்கபாண்டியன் எழுதியுள்ளார். ஜி.வி.பிரகாஷ் இளையராஜாவுடன் முதன் முதலாக இணைந்து இப்பாடலை பாடியுள்ளர் என்பது குறிப்பிடத்தக்கது. பாலாவின் ‘பி.ஸ்டுடியோஸ்’ தயாரிக்கும் ‘நாச்சியார்’ டீஸர் சமீபத்தில் வெளியாகி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

#Naachiyaar #GVPrakash #Jyothika #Bala #Illayaraja #BStudios #OnnavittaYaarumIlla

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கீ - ட்ரைலர்


;