’கயல்’ சந்திரனுக்கு ஜோடியாகும் நிவின் பாலி ஹீரோயின்!

‘கயல்’ சந்திரன் நடிக்கும்‘டாவு’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகும் நிவின் பாலி பட ஹீரோயின்!

செய்திகள் 22-Nov-2017 11:14 AM IST VRC கருத்துக்கள்

‘தில்லுக்கு துட்டு’ படத்தை இயக்கிய ராம்பாலா அடுத்து இயக்கும் படம் ‘டாவு’. இந்த படத்தில் ‘கயல்’ சந்திரன் கதாநாயகனாக நடிக்கிறார். ‘கயல்’ சந்திரன் நடிப்பில் ‘திட்டம்போட்டு திருடுற கூட்டம்’ படத்தை தயாரிக்கும் Two Movie Buffs’ நிறுவனம்தான் ‘டாவு’ படத்தையும் தயாரிக்கிறது. இந்த படத்தில் ‘கயல்’ சந்திரனுடன் லிவிங்ஸ்டன், முனீஸ்காந்த், மனோபாலா, ஊர்வசி முதலானோர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள நிலையில் இப்படத்திற்கான கதாநாயகி தேர்வு நடந்து வந்தது. இப்போது கதாநாயகி தேர்வும் முடிவுக்கு வந்துள்ளது. நிவின் பாலியுடன் ‘ஜேக்கபின்டெ சொர்க்க ராஜ்ஜியம்’ என்ற மலையாள படத்தில் நடித்த ரெபா மோனிகா ஜான் ‘டாவு’ படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் துவங்கவிருக்கிறது. இந்த படத்தின் ஒளிப்பதிவை தீபக் குமார்பதி கவனிக்க, சந்தோஷ் தயாநிதி இசை அமைக்கிறார்.

#RebaMonikajhon #KayalChandran #TPTK #Daavu #NivinPauly #Rambala #DhillukkuDhuttu

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

திட்டம் போட்டு திருடுற கூட்டம் - டிரைலர்


;