‘இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘காஷ்மோரா’ ஆகிய படங்களை இயக்கிய கோகுல் இயகக்த்தில் விஜய்சேதுபதி நடித்து வரும் படம் ‘ஜுங்கா’. சமீபத்தில் பாரிஸில் துவங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு அங்கு 30 நாட்களுக்கும் மேல் நடைபெற்றுள்ளது. ‘வனமகன்’ படத்தில் நடித்த சாயிஷா கதாநாயகியாக நடிக்கும் இந்த படத்தில் மற்றுமொரு ஹீரோயின் கேரக்டரும் உண்டாம்! இந்த கேரக்டரில் சமீபத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியாகிய ‘சோலோ’ படத்தில் கதாநாயகியாக நடித்த நேஹா சர்மா நடிக்கவிருக்கிறாராம். சமீபத்தில் ‘ஜுங்கா’ படக்குழுவினர் நேஹா சர்மாவை சந்தித்து ‘ஜுங்கா’வின் கதை குறித்து பேச, நேஹாவுக்கு கதை பிடித்தது என்றும் இப்படத்தில் நடிக்க அவர் ஒப்புக் கொண்டுள்ளார் என்றும், இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை ‘ஜூங்கா’ குழுவினர் விரைவில் வெளியிடவிருக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது. இதுவரை விஜய்சேதுபதி நடித்த படங்களிலேயே அதிக பொருட் செலவில் உருவாகி வரும் இப்படத்தை விஜய்சேதுபதியே தயாரிக்கிறார் என்றும் படப்பிடிப்பு துவங்கிய நிலையிலேயே இப்படத்தை நடிகர் அருண்பாணியனின் ‘பி அண்ட் பி குரூப்ஸ்’ நிறுவனம் வாங்கியுள்ளது என்ற செய்தியை ஏற்கெனவே வெளியிட்டிருந்தோம்.
#Junga #VijaySethupathi #Kaashmora #Gokul #Vanamagan #Sayeesha #NehaSharma #ArunPandian
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா இணைந்து நடித்த படம் ‘நானும் ரௌடிதான்’. இந்த படம்...
சமீபத்தில் மலையாளத்தில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் பேசப்பட்டு வெற்றிப் பமாக அமைந்த படம் ‘ஹெலன்’....
அசோக் செல்வன், ரித்விகா சிங் இணைந்து நடிக்கும் படம் ‘ஓ மை கடவுளே’. இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸிடம்...