அஜித், விஜய்க்கு இணையாக மாஸ் தெறிக்கும் ஓப்பனிங் - சந்தானம்

சந்தானம் நடிப்பில் வெளியாகவிருக்கும் 'சக்க போடு போடு ராஜா' படத்தின்  பத்திரிகையாளர் சந்திப்பு

செய்திகள் 5-Dec-2017 3:07 PM IST Top 10 கருத்துக்கள்

விடிவி கணேஷ் தயாரிப்பில் சந்தானம் நடிப்பில் வரும் 22 - ஆம் தேதி வெளியாகவிருக்கும் 'சக்க போடு போடு ராஜா' செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பில் நடிகர் சந்தானம் மற்றும் தயாரிப்பாளரான விடிவி கணேஷ் பங்கேற்று படம் பற்றிய சில தகவல்களை பகிர்ந்துள்ளனர்.

படம் மொத்தம் 65 நாள்கள் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டிருந்தோம், அதில் 21 நாட்கள் தொடர்படப்பிடிப்பு நடைபெற்றது. அனைவரும் இரவு பகல் பார்க்காமல் அயராது உழைத்துள்ளோம். உண்மையாக உழைத்தால் நிச்சயம் உயரமுடியும். சிம்புவிற்கும் எனக்கும் நல்ல நட்பு உள்ளது. சிம்பு எங்களுக்காகவே இந்த படத்தில் இசையமைக்க ஒத்துக்கொண்டார். இப்படம் காதல், சென்டிமெண்ட் கலந்த ஆக்ஷ்ன் திரைப்படம் உருவாகியுள்ளதால் என்னுடைய ஓப்பனிங் ஸீனுக்காக அஜித், விஜய்க்கு இணையான மாஸாக இசையமைத்துள்ளார் சிம்பு.

என்னை சினிமாவிற்கு சிம்பு தான் அறிமுகப்படுத்தினார், அவர் என்னுடைய படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாவதில் எனக்கு பெருமையாக உள்ளது. எந்த தயாரிப்பாளரும் தன் சொந்த பணத்தில் படத்தை எடுப்பதில்லை பைனான்சியர் மூலம் தான் பணம் பெற்று படத்தை எடுத்து முடிக்கிறார்கள். எந்த ஒரு படப்பிடிப்பிற்கும் திட்டமிடல் வேண்டும். திட்டமிட்டபடி படத்தை எடுத்து, ரிலீஸ் செய்தால் யாருக்கும் நஷ்டம் வராது. அதே போல் சிவகார்த்திகேயனின் "வேலைக்காரன்" படமும் டிசம்பர் 22 அன்று வெளியாகஇருக்கிறது.
இது என் படத்திற்கும், சிவா படத்திற்குமான போட்டியே தவிர, சிவாவுக்கும் எனக்கும் தனிப்பட்ட முறையில் போட்டி, பொறாமையேதுமில்லை என சந்தானம் பேசினார்.

உடன் விடிவிகணேஷும், நடிகருமான ரோபோ சங்கர் பங்கேற்றனர். படத்திற்கு தணிக்கைக்குழு யு/ஏ சான்றிதழ் அளித்துள்ளனர். படத்தின் மொத்த இசை ஆல்பத்தை நாளை ( DEC 6 ) தனுஷ் வெளியிடுகிறார். இரு காமெடியன்கள் ஹீரோவாக உயர்ந்து அவர்களின் படம் ஒரே நேரத்தில் வெளியாகவிருப்பது ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

#SakkaPoduPoduRaja #Santhanam #Ajith #Vijay #Simbu #STR #VTVGanesh #RoboShankar #VaibhaviSandiliya

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

லைப் ஆப் ராம் வீடியோ பாடல் - 96


;