ஜெய் படத்துடன் களமிறங்கும் பிரபுதேவா படம்!

தங்கர் பச்சான் இயக்கத்தில் பிரபுதேவா, பூமிகா நடித்துள்ள ‘களவாடிய பொழுதுகள்’ இம்மாதம் 29-ஆம் தேதி ரிலீசாகிறது!

செய்திகள் 6-Dec-2017 12:40 PM IST VRC கருத்துக்கள்

தங்கர் பச்சான் இயக்கத்தில் பிரபு தேவா, பூமிகா, பிரகாஷ்ராஜ், சத்யராஜ், கஞ்சா கருப்பு முதலானோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ள படம் ‘களவாடிய பொழுதுகள்’. ஐங்கரன் இண்டர்நேஷனல் ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் கருணாமூர்த்தி, அருண்பாண்டியன் இருவரும் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தின் அனைத்து வேலைகளும் முடிவடைந்து பல ஆண்டுகள் ஆன நிலையில் இப்படம் வெளியாகாமல் இருந்து வந்தது. இந்நிலையில் ‘களவாடிய பொழுதுகள்’ படத்தை ரிலீஸ் செய்யும் வேலைகளில் இறங்கியுள்ள படக்குழுவினர் இப்படத்தை இம்மாதம் 29-ஆம் தேதி ரிலீஸ் செயுய முடிவு செய்து, அது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பையும் வெளியிட்டுள்ளனர். ‘தேவி; படத்தை தொடர்ந்து பிரபு தேவா நடிப்பில் வெளியாகவுள்ள ‘களவாடிய பொழுதுகள்’ படத்தின் ஒளிப்பதிவை இயக்குனர் தங்கர் பச்சானே கவனித்திருக்க, பரத்வாஜ் இசை அமைத்துள்ளார். ‘களவாடிய பொழுதுகள்’ வெளியாகும் அதே தினம் ஜெய், அஞ்சலி, ஜனனி ஐயர் இணைந்து நடித்துள்ள ‘பலூன்’ திரைப்படமும் வெளியாகவிருக்கிறது.

#KalavaadiyaPozhuthugal #PrabhuDeva #Bhoomika #ThangarBachchan #PrakashRaj #Jai #Balloon #Anjali

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பப்பர பப்பா வீடியோ பாடல் - லட்சுமி


;