அமலா பால் இடத்தைப் பிடித்த பிரியா ஆனந்த்!

நிவின் பாலி படத்தில், அமலா பால் இடத்தை பிடித்த பிரியா ஆனந்த்!

செய்திகள் 6-Dec-2017 1:37 PM IST VRC கருத்துக்கள்

தமிழில் ஜோதிகா நடிப்பில் ‘36 வயதினிலே’ படத்தை இயக்கியவர் ரோஷன் ஆண்ட்ரூஸ். இவர் இப்போது ‘காயம் குளம் கொச்சுண்ணி’ என்ற மலையாள படத்தை இயக்கி வருகிறார். மிக பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்த படத்தில் நிவின் பாலி, காயம்குளம் கொச்சுண்ணி என்ற கதாபாத்திரத்தில் நடிக்க, அமலா பால் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். ஆனால் இப்போது இந்த படத்திலிருந்து அமலா பால் கால்ஷீட் பிரச்சனை காரணமாக விலகியுள்ளார். இதனை ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளார் அமலா பால்! இப்போது அமலா பாலுக்கு பதிலாக பிரியா ஆனந்த் ஒப்பந்தமாகியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே பிருத்திவி ராஜுடன் ‘எஸ்ரா’ என்ற மலையாள படத்தில் நடித்துள்ளார் பிரியா ஆனந்த். இது அவர் நடிக்கும் இரண்டாவது மலையாள படமாகும்.

#PriyaAnand #NivinPauly #AmalaPaul #KayamkulamKochukanni #RoshanAndrews #Jyothika #36Vayathinile

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

காதல் கடல் தானா வீடியோ பாடல் - ராட்சசன்


;