‘ஆண் தேவதை’க்காக பாடிய ‘ஜிமிக்கி கம்மல்…’ புகழ் வினீத் சீனிவாசன்!

தாமிரா இயக்கத்தில் சமுத்திரக்கனி, ‘ஜோக்கர்’ புகழ் ரம்யா பாண்டியன் நடிக்கும் ‘ஆண் தேவதை’

செய்திகள் 6-Dec-2017 3:00 PM IST VRC கருத்துக்கள்

கே.பாலச்சந்தர், பாரதிராஜா ஆகிய இரு பெரும் ஜாம்பவான்களை நடிக்க வைத்து ‘ரெட்டைச்சுழி’ என்ற படத்தை இயக்கியவர் தாமிரா. அவர் இப்போது இயக்கி வரும் படம் ‘ஆண் தேவதை’. இந்த படத்தில் சமுத்திரகனி கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக ‘ஜோக்கர்’ படத்தில் நடித்த ரம்யா பாண்டியன் நடிக்கிறார். சிகரம் சினிமாஸ், ‘சைல்ட் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனங்கள் சார்பாக அகமது ஃபக்ருதீன், ஷேக் தாவூத், முஸ்தபா, குட்டி ஆகியோர் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில் ஒளிப்பதிவாளராக விஜய் மில்டன், இசை அமைப்பாளராக ஜிப்ரான், படத்தொகுப்பாளராக காசி விஸ்வநாதன் ஆகியோர் புரிந்து வருகின்றனர்.

இந்த படத்திற்கு ‘ஆண் தேவதை’ என்று டைட்டில் சூட்டியதற்கான காரணம் குறித்து இயக்குனர் தாமிரா கூறியதாவது, ‘‘தேவதை’ என்பது சிறப்பியல்பு கொண்ட ஒரு கேரக்டர். அதற்கு ஆண், பெண் என பாகுபாடு இல்லை. பெண்களை எமாற்றுவதற்காகவே ‘பெண் தேவதை’ என தவறாக கற்பிதம் செய்து வைத்திருக்கிறார்கள். நல்லியல்பு கொண்ட எல்லோரும் தேவதையே! எல்லாம் சரியாக இருக்கிற, குறைகள் பெரிதும் இல்லாத ஆணும் ஒரு தேவதைதான்! அவன்தான் இப்படத்தின் ஹீரோ. படம் பார்க்கும்போது உங்களுக்குள் இருக்கும் சில விஷயங்களை அவன் பிரதிபலிப்பதை உணர்வீர்கள்’’ என்றார்.

இந்த படத்தில் சமுத்திரகனி, ரம்யா பாண்டியனுடன் ராதாரவி, இளவரசு, காளி வெங்கட், அறந்தாங்கி நிஷா, சுஜா வாருண்ணி, ஈ.ராமதாஸ் ஆகியோருடன் மோனிகா, கவின் பூபதி என இரண்டு குழந்தைகளும் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்திற்காக ‘ஜிமிக்கி கம்மல்…’ பாடல் புகழ் வினீத் சீனிவாசன் ஒரு பாடலை பாடியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இறுதிகட்ட வேலைகள் நடந்து வரும் ‘ஆண் தேவதை’யை ஜனவரி மாதம் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

#Samuthirakani #Thaamira #AanDevathai #RamyaPandian #JokerMovie #Ghibran #KasiViswanathan

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஆண் தேவதை - ட்ரைலர்


;