‘‘தொடர்ந்து நல்ல படங்கள் வருவதற்கு ‘அருவி’ உந்துதலாக இருக்கும்!’’ - எஸ்.ஆர்.பிரபு

‘அருவி’ பத்திரிகையாளர் சந்திப்பில் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு பேச்சு

செய்திகள் 6-Dec-2017 5:28 PM IST Chandru கருத்துக்கள்

‘தீரன்’ படத்தைத் தொடர்ந்து ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் அடுத்த ரிலீஸாக வரும் 15ஆம் தேதி வரவிருக்கிறது ‘அருவி’ திரைப்படம். அறிமுக இயக்குனர் அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் அதிதி பாலன் கதையின் நாயகியாக நடித்துள்ளார். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த சந்திப்பில் பேசிய தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு,

‘‘நாங்கள் தயாரித்த படங்களிலேயே சிறந்த படம் எதுவென்று கேட்டால் நான் ‘அருவி’யைத்தான் சொல்வேன். ‘அருவி’ படத்தின் கதையை அருண் சொன்னதே ஒரு புதிய அனுபவமாக இருந்தது. அழுத்தமான கருத்துக்களைக் கொண்டுள்ள இந்தப் படம் வணிக ரீதியாக வெற்றிபெறுமா என்ற சந்தேகம் ஆரம்பத்தில் இருந்தது. ஆனால், எப்படியும் இந்தக்கதையை படமாக்கிவிடவேண்டும் என்ற உணர்வு எனக்குள் இருந்து கொண்டே இருந்தது. அதனால், ஒரு குறிப்பிட்ட பட்ஜெட்டிற்குள் இந்தப் படத்தை தயாரிப்பது என முடிவு செய்து. அதனை இயக்குனர் அருணிடம் தெரிவித்தேன். காரணம், இந்த படம் வணிக ரீதியாக தோற்றுவிட்டால் அது ஒரு மோசமான உதாரணமாக மாறிவிடும். எனவே, திட்டமிட்டு படப்பிடிப்பை நடத்தி இந்தப் படத்தை வெற்றிப் படமாக்க வேண்டும் என முடிவு செய்து உழைத்தோம். ஆரம்பத்தில் இந்தப் படத்தை விருது விழாக்களில் மட்டுமே திரையிட்டுக் கொண்டிருந்தோம். ஆனால், படத்தைப் பார்த்த என் சொந்தங்கள் சிலர் இது தியேட்டரில் கொண்டாடப்படவேண்டிய படம் என சிலாகித்தனர். அந்த உத்வேகத்துடன், ரசிகர்கள் நல்ல படத்தை ஜெயிக்க வைப்பார்கள் என்ற நம்பிக்கையும் சேர்ந்து கொண்டதால் படத்தை இப்போது டிசம்பர் 15ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளோம். அருவியின் வெற்றி எதிர்காலத்தில் இதுபோன்ற நல்ல கதைகளுக்கு தயாரிப்பாளர்கள் கிடைக்க உந்துதலாக இருக்கும்!’’ என்றார்.

#Aruvi #AditiBalan #SRPrabhu #ArunPrabhuPurushothaman #DreamWarriorPictures

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சூர்யா 36 படத்துவக்கம் - வீடியோ


;