‘AAA’ பட விவகாரம்! மேடையில் மன்னிப்பு கேட்ட சிம்பு!

‘சக்க போடு போடு ராஜா’ பட இசை வெளியீட்டு விழாவில் ‘AAA’ பட விவகாரம் சம்பந்தமாக மன்னிப்பு கேட்ட சிம்பு!

செய்திகள் 7-Dec-2017 11:17 AM IST VRC கருத்துக்கள்

சேதுராமன் இயக்கத்தில் சந்தானம், வைபவி ஷாண்டில்யா நடித்து சிம்பு இசை அமைத்துள்ள ‘சக்க போடு போடு ராஜா’ படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது. இவ்விஷாவில் நடிகர் தனுஷ், இசை அமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, சிம்பு, இயக்குனர் ராஜேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் தனுஷ் பேசும்போது, ‘‘இந்த விழாவுக்கு நான் சிம்பு அழைப்பு விடுத்ததினாலேயே வந்தேன். என் விழாக்களுக்கு அழைப்பு விடுத்தால் அவரும் வருவார். அவரும், நானும் நல்ல நட்புடன்தான் உள்ளோம். மற்றவர்கள் கூறுவது போல் எனக்கும் அவருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. எங்களுக்கு நடுவில் இருப்பவர்கள் தான் எங்களுக்கு இடையில் பிரச்சனைகளை ஏற்படுத்தி வருகிறார்கள். நான் இங்கு வந்தபோது சிம்பு ரசிகர்கள் எனக்கு உற்சாக வரவேற்பு அளித்தார்கள்! ஒவ்வொரு நடிகரின் ரசிகர்களும் இப்படித்தான் இருக்க வேண்டும்’’ என்றார்;

அதன் பிறகு சிம்பு பேசும்போது, ‘‘என் நண்பர் சந்தானம் கேட்டுக் கொண்ட ஒரே காரந்த்திற்காகதான் இப்படத்திற்கு இசை அமைக்க ஒத்துக்கொண்டேன். அவரது வளர்ச்சிக்கு நான் எப்போதும் பக்கபலமாக இருப்பேன். கடந்த சில நாட்களாக என்னைப் ப்ற்றி சில பிரச்சனைகள் போய் கொண்டிருக்கிறது. அவை அனைத்தும் பொய் என்று நான் சொல்ல மாட்டேன். ‘AAA’ திரைப்படத்திற்கு எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பு கிடைக்கவில்லை. அந்த விஷயத்தில் என் மீது தவறுகள் இருந்தால் அதை படம் எடுக்கும்போதோ அல்லது எடுத்து முடித்த பின்னரோ, அல்லது படம் வெளியிட்ட உடனையாவது கூறியிருக்க வேண்டும். அதை விட்டு விட்டு படம் வெளியாகி 6 மாதங்களுக்கு மேலான நிலையில் அதைபற்றி யாரோ பேசுவதை வைத்து இது மாதிரி செய்து விட்டார்கள்.

என் மீதும் சில தவறுகள் இருக்கும். அதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் இது போன்ற விஷயங்களை பற்றி பேசுவதற்கு ஒரு முறை உள்ளது. அவர்கள் செய்தது சரியல்ல. நான் நல்லவன் என்று சொல்லவில்லை. நடந்தது நடந்து விட்டது. அதற்காக இந்த மேடையில் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். எல்லோரும் சேர்ந்து அதிகபட்சமாக என்ன செய்து விடுவீர்கள்? என்னை நடிக்கவிடாமல் தடுப்பீர்கள்! அவ்வளவுதானே? ஆனால் என் ரசிகர்களுக்கு நான் ஏதாவது செய்து கொண்டுதான் இருப்பேன். அதை யாராலும் தடுக்க முடியாது.

மணிரத்னம் இப்போதும் நான் படத்தில் இருக்கிறேன் என்று தான் கூறி வருகிறார். அவருக்கு என் மீது ஏன் இவ்வளவு நம்பிக்கை என்று தெரியவில்லை. அவரும் உங்களைப் போல எனது ரசிகரா என்பது தெரியவில்லை. ஜனவரி 20-ஆம் தேதி படப்பிடிப்பு துவங்கும் என்று கூறியுள்ளார். அந்த படத்தில் நடிப்பதற்காக நான் உடம்பை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். இருப்பினும் அது சற்று கடினமாகதான் இருக்கிறது. விரைவில் நல்லது நடக்கும் என்று நம்புகிறேன்’’ என்றார் சிம்பு!

விடிவி கணேஷ் தயாரித்துள்ள ‘சக்க போடு போடு ராஜா’ இம்மாதம் 22-ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.

#SakkaPoduPoduRaja #STR #AAAMovie #Santhanam #Simbu #Dhanush #Yuvan

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சக்க போடு போடு ராஜா - டிரைலர் 2


;