3 ஹீரோயின்களுடன் களமிறங்கும் ஜெய்!

‘பலூன்’, ‘கலகலப்பு-2’ படங்களை தொடர்ந்து ஜெய் நடிக்கும் படத்தில் 3 ஹீரோயின்கள்!

செய்திகள் 7-Dec-2017 11:37 AM IST VRC கருத்துக்கள்

ஜெய் நடித்துள்ள ‘பலூன்’ இம்மாதம் 29-ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இந்த படத்தை தொடர்ந்து சுந்தர் சி.இயக்கத்தில் ‘கலகலப்பு-2’ படத்தில் நடித்து முடித்துள்ள ஜெய் அடுத்து ‘எத்தன்’ படத்தை இயக்கிய சுரேஷ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்த படத்தில் I.T.புரொஃபஷனலாக நடிக்கும் ஜெய்யுடன் மூன்று கதாநாயகிகள் நடிக்க இருக்கிறார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஒரு கதாநாயகியாக ராய் லட்சுமி ஒப்பந்தமாகியிருப்பது குறித்து அவரே ட்வீட் செய்துள்ளார். இன்னொரு நாயகியாக வரலட்சுமி சரத்குமாரும் மற்றொரு கதாநாயகியாக கேத்ரின் தெரெசாவும் நடிக்க இருக்கிறார்களாம். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் சென்னையில் துவங்கி, மதுரை மற்றும் கேரளா, சாலக்குடியில் நடைபெறவுள்ளது என்றும் அந்த தகவல் தெரிவிக்கிறது. இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கபப்டுகிறது.

#Jai #Balloon #Kalakalappu2 #RaaiLakshmi #Anjali #JananiIyer #SundarC

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பலூன் - டிரைலர்


;