‘தமிழ்ப் படம்-2’வில் ‘மிர்ச்சி’ சிவாவுடன் இணையும் ‘வீரா’ நாயகி!

சி.எஸ்.அமுதன் இயக்கும் ‘தமிழ்ப் படம்’ இரண்டாம் பாகத்தில் மிர்ச்சி சிவா, ஐஸ்வர்யா மேனன் இணைந்து நடிக்கிறார்கள்!

செய்திகள் 7-Dec-2017 2:55 PM IST VRC கருத்துக்கள்

சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் ‘மிர்ச்சி’ சிவா, திஷா பாண்டே நடித்து வெற்றிப் பெற்ற படம் ‘தமிழ்படம்’. 2010 ஜனவரி மாதம் வெளியான இந்த படம் தமிழ் திரையுலகில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. இந்த படம் வெளியாகி ஏழு ஆண்டுகளான நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கவிருக்கிறார் சி.எஸ்.அமுதன். இரண்டாம் பாகத்திலும் ’மிர்ச்சி’ சிவாவே கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக விரைவில் வெளியாகவிருக்கும் ‘வீரா’ படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள ஐஸ்வர்யா மேனன் நடிக்கிறார். ‘தமிழ்ப் படம்’ முதல் பாகத்தை தயாரித்தவர்களில் ஒருவரான ‘Y Not Studios’ ஷஷிகாந்த் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் துவங்கவிருக்கிறது. ‘தமிழ்ப் படம்’ படத்தை தொடர்ந்து சி.எஸ்.அமுதன் ‘ரெண்டாவது படம்’ என்ற பெயரில் ஒரு படத்தை இயக்கியுள்ளார். ஆனால் இந்த படம் இன்னும் வெளியாகவில்லை.

#ThamizhPadam2 #MirchiSiva #CSAmudhan #DishaPandey #AishwaryaMenon #YNotStudios

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

என் நடனம் வீடியோ பாடல் - தமிழ் படம் 2


;