‘அருவி’யை பாராட்டு மழையில் நனைத்த பிரபலங்கள்!

‘அருவி’ பிரீமியர் ஷோவில் பிரபலங்கள் பாராட்டு!

கட்டுரை 13-Dec-2017 1:04 PM IST Chandru கருத்துக்கள்

ஜோக்கர், காஷ்மோரா, தீரன் அதிகாரம் ஒன்று படங்களைத் தொடர்ந்து ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘அருவி’. அறிமுக இயக்குனர் அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் புதுமுகம் அதிதி பாலன் நடித்திருக்கும் இப்படம் வரும் வெள்ளிக்கிழமை உலகமெங்கும் வெளியாகிறது. ஏற்கெனவே பல திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு பாராட்டுக்களை குவித்துள்ள இப்படம், சில பிரேத்யக காட்சிகளிலும் வெகுவாகப் பாராட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் ‘பிரீமியர் ஷோ’ நேற்றிரவு சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. படம் பார்த்து முடித்த பிரபலங்கள் பலரும் படத்தை சிலாகித்துப் புகழ்ந்துள்ளனர்.

இயக்குனர்கள் புஷ்கர் - காயத்ரி
‘‘அருவி மிகச்சிறந்த அற்புதமான திரைப்படம். இயக்குனர் அருண் பிரபு புருஷோத்தமன் படத்தின் ஆன்மாவை அற்புதமாக ரசிகர்களுக்கு கடத்தியிருக்கிறார். படத்தின் ஒவ்வொரு கதாபாத்திரங்களின் மேலும் அனுதாபம் வரவழைக்கக்கூடிய அளவுக்கு சிறப்பாக உருவாக்கியிருக்கிறார். பின்னணி இசை, ஒளிப்பதிவு, சவுண்ட் டிசைன் என அனைத்து டெக்னிக்கல் விஷயங்களுமே சிறப்பாக செயல்பட்டுள்ளன. அழுத்தமான தமிழ் சினிமா. பெருமையாக உள்ளது!’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் ஹரிஷ் கல்யாண்
‘‘இந்த வருடத்தின் சிறந்த படங்களில் ஒன்று ‘அருவி’. படக்குழுவினருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். குறிப்பாக ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுக்கும், படத்தின் இயக்குனர் அருண்பிரபு புருஷோத்தமனுக்கும், சிறப்பாக நடித்துள்ள அதிதி பாலனுக்கும் வாழ்த்துக்கள். நிச்சயமாக பெரிய வெற்றியைப் பெறும்!’’ என்றார்.

இயக்குனர் அறிவழகன்
‘‘அழுத்தமான ஒரு கதையை கையிலெடுத்து, அதில் நக்கல் நய்யாண்டிகளை சரியான விகிதத்தில் கலந்து அனைத்துத்தரப்பு ரசிகர்களும் பார்க்கும் ஒரு படமாக ‘அருவி’யை உருவாக்கியிருக்கிறார் அருண் பிரபு புருஷோத்தமன். நாயகி அதிதி பாலன் அனைவரையும் ஆக்ரமித்துவிட்டார். மற்ற அனைத்து கதாபாத்திரங்களும் சிறப்பாக நடித்துள்ளனர். தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவின் சினிமா பற்றிய ஆழமான பார்வைக்கு பாராட்டுக்கள்!’’ எனப் பேசியுள்ளார்.

தயாரிப்பாளர் மதன், எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட்ஸ் மோஷன் பிக்சர்ஸ்
‘‘2017ல் வெளிவந்துள்ள சிறந்த படங்களின் பட்டியலில் ‘அருவி’யும் இணைந்திருக்கிறது. இப்படியொரு படைப்பைக் கொடுத்த தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவுக்கும், இயக்குனர் அருணுக்கும் நன்றிகள். நாயகி அதிதி பாலன் மற்றும் நடித்துள்ள அனைவருமே சிறப்பாக நடித்துள்ளனர். படக்குழுவுக்கு பாராட்டுக்கள்!’’ என்றுள்ளார்.

இயக்குனர் நெல்சன் வெங்கடேஷன் (ஒரு நாள் கூத்து)
‘‘இப்போதுதான் ‘அருவி’யில் நனைந்துவிட்டு வெளிவந்திருக்கிறேன். ஒரு அருமையான படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகியிருக்கிறார் அருண் பிரபு. தொடர்ந்து நல்ல படங்களை தயாரித்து வரும் எஸ்.ஆர்.பிரபு அவர்களுக்கு தலை வணங்குகிறேன்.!’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் (ரெமோ)
‘‘டிசம்பர் புயலாகக் கிளம்பியுள்ளது அருவி. வேற வெலவல் படம். அருவி வேற லெவல் பொண்ணு!’’ என ட்வீட் செய்துள்ளார்.

#Aruvi #DreamWarriorPictures #AditiBalan #ArunPrabhu #NelsonVenkatesan #SRPrabhu #PushkarGayathri #BhagyarajKannan #Madhan

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ராட்சசி - ட்ரைலர்


;