‘வேலைக்காரன்’ ரன்னிங் டைம் மற்றும் முன்பதிவு விவரம்!

சிவகார்த்திகேயனின் ‘வேலைக்காரன்’ ரன்னிங் டைம் மற்றும் முன் பதிவு விவரங்கள்!

செய்திகள் 16-Dec-2017 10:37 AM IST VRC கருத்துக்கள்

மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, ஃபஹத் ஃபாசில் முதலானோர் நடித்திருக்கும் ‘வேலைக்காரன்’ வருகிற 22-ஆம் தேதி உலகம் முழுக்க வெளியாகவிருக்கிறது. ‘ரெமோ’ படத்தை தொடர்ந்து ‘24 AM STUDIOS’ நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த படத்திற்கு சென்சாரில் அனைவரும் பாரக்கக் கூடிய படமாக ‘U’ சர்டிஃபிக்கெட் கிடைத்திருக்கிற செய்தியை ஏற்கெனவே வெளியிட்டிருந்தோம். இப்போது இந்த படத்தின் சென்சார் சர்டிஃபிக்கெட்டை வெளியிட்டுள்ளனர். அதில் ‘வேலைக்காரன்’ திரைப்படம் 159 நிமிடம், 41 விநாடிகள் ஓடக்கூடிய படமாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் இன்று வெளியிடப்பட்டுள்ள பேப்பர் விளம்பரத்தில் இந்த படத்திற்கான முன் பதிவு நாளை (17-12-17) முதல் துவங்கவிருக்கிறது என்ற தகவலையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

#Velaikkaran #SivaKarthikeyan #Nayanthara #RDRaja #MohanRaja #24AMStudios #FaahadFazil

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தர்பார் ட்ரைலர்


;