மீண்டும் இயக்குனராகும் தனுஷ்!

‘பவர் பாண்டி’ படத்தை தொடர்ந்து தனுஷ் இயக்கத்தில் உருவாகும் படத்தை ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது!

செய்திகள் 16-Dec-2017 11:29 AM IST VRC கருத்துக்கள்

வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வட சென்னை’, கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ முதலான படங்களில் நடித்து வரும் தனுஷ் இப்போது ரஜினி நடிப்பில் ‘காலா’ என்ற படத்தை தயாரித்தும் வருகிறார். இந்த பட வேலைகள் முடிந்ததும் தனுஷ் மீண்டும் ஒரு படத்தை இயக்கவிருக்கிறார் என்றும் இந்த படத்தை முரளி ராமசாமியின் ‘ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது. ராஜ்கிரண் நடிப்பில் ‘பவர் பாண்டி’ என்ற படத்தை தயாரித்து, இயக்கி, நடித்த தனுஷ் அதன் பிறகு நடிப்பிலும் தயாரிப்பிலும் கவனம் செலுத்தி வந்த நிலையில் இப்போது மீண்டும் படத்தை இயக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். ஆனால் இது குறித்த எந்த அதிகாரபூர்வ தகவலும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

#Dhanush #PaPandi #VadaChennai #Maari2 #EnaiNokiPaayumThotta #Gauthammenon #Kodi #SriThenandalFilms

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பட்டாஸ் ட்ரைலர்


;