செல்பி எடுத்து ஷூட்டிங்கை அறிவித்த மணிரத்னம் - சிம்பு!

மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படத்தின் புதிய தகவல்

செய்திகள் 20-Dec-2017 10:15 AM IST Chandru கருத்துக்கள்

'காற்று வெளியிடை’ படத்தை தொடர்ந்து மணிரத்னம் இயக்கும் படத்தில் அரவிந்த்சாமி, விஜய்சேதுபதி, சிம்பு, ஃபஹத் ஃபாசில், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடிக்கிறார்கள் என செப்டம்பர் மாதமே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படப்பிரச்சனை காரணமாக சிம்பு நடிப்பதற்கு தடைவிதிக்கப்படலாம் என்ற பேச்சு அடிபடவே, திட்டமிட்டபடி மணிரத்னம் படத்தில் சிம்பு நடிப்பாரா என்ற சந்தேகம் நிலவி வந்தது. அந்த சந்தேகத்தை ஒரு செல்பி மூலமே தீர்த்துவைத்துவிட்டார் சிம்பு. நேற்று மணிரத்னத்தின் பயிற்சிப்பட்டறைக்குச் சென்ற சிம்பு, தான் முதல்முறையாக இசையமைத்திருக்கும் ‘சக்கப்போடு போடு ராஜா’ படத்திற்காக ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொண்டு மணிரத்னத்துடன் செல்பி ஒன்றும் எடுத்து வெளியிட்டுள்ளார். இதனால் ஏற்கெனவே திட்டமிட்டுள்ளபடி ஜனவரி 3வது வாரத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என்பது உறுதியாகியுள்ளது.

மெட்ராஸ் டாக்கீஸின் 17-ஆவது தயாரிப்பாக உருவாகவிருக்கும் இந்த படத்திற்கும் ஏ.ஆர்.ரஹ்மானே இசை அமைக்கவிருக்கிறார். அத்துடன் இந்த படத்தில் ஒளிப்பதிவாளராக சந்தோஷ் சிவன், படத்தொகுப்பாளராக ஸ்ரீகர் பிரசாத்தும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

#STR #Maniratnam #SakkaPoduPoduRaja #ARRahman #SanthoshSivan #SreekarPrasad #AAA

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மரண மட்ட padal


;