23 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ‘சீவலப்பேரி பாண்டி’யில் ஹாரிஸ் ஜெயராஜ்?

நெப்போலியன் நடிப்பில் வெளிவந்து சூப்பர்ஹிட்டான ‘சீவலப்பேரி பாண்டி’ படம் ரீமேக் ஆகிறது

செய்திகள் 20-Dec-2017 10:47 AM IST Chandru கருத்துக்கள்

பிரதாப் போத்தன் இயக்கத்தில் நெப்போலியன் நடித்து 1994ஆம் ஆண்டு வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட்டான படம் ‘சீவலப்பேரி பாண்டி’. அதற்கு முன்பு வரை வில்லனாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வந்த நெப்போலியனுக்கு ஹீரோவாக இதுவே முதல் படம். இப்படத்தின் வெற்றி நெப்போலியனின் சினிமா வாழ்க்கையை தலைகீழாக மாற்றியமைத்தது. பி.ஜி.ஸ்ரீகாந்த் தயாரித்த இப்படத்திற்கு ஆதித்யன் இசையமத்திருந்தார். அந்த காலகட்டத்தில் ஆதித்யனிடம் கீபோர்டு பிளேயராகப் பணியாற்றியவர் ஹாரிஸ் ஜெயராஜ்.

‘சீவலப்பேரி பாண்டி’யின் கதையை தற்போதைய காலகட்டத்திற்குத் தகுந்தாற்போல் சிறிது மாற்றம் செய்து ரீமேக் செய்யவிருக்கிறாராம் பி.ஜி.ஸ்ரீகாந்த். இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பார் என்று கூறப்படுகிறது. முன்னணி கமர்ஷியல் ஹீரோக்களிடம் இப்படத்தில் நடிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் தற்போது நடைபெற்று வருகிறதாம். விரைவில் இப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.

#Napoleon #SeevalperiPandi #SaranyaPonvannan #Adityan #HarrisJayaraj #PrathapPothan #NizhalgalRavi #PGSrikanth

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

காப்பான் - டீஸர்


;