‘மதுரசூரன்’ விஜயகாந்த், ‘மதுரவீரன்’ ஷண்முக பாண்டியன்!

விஜயகாந்த் மகல் ஷண்முக பாண்டியன் நடிக்கும் ‘மதுரவீரன்’ இசை வெளியீட்டு விழா தகவல்கள்!

செய்திகள் 26-Dec-2017 11:57 AM IST VRC கருத்துக்கள்

விஜயகாந்த் மகன் ஷண்முக பாண்டியன் கதாநாயகனாக நடிக்கும் இரண்டாவது படம் ‘மதுரவீரன்’. ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா இயக்கியுள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் தயாநிதி இசை அமைத்துள்ளார். இந்த படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் விஜயகாந்த், பிரேமலதா விஜயகாந்த், எல்.கே.சுதீஷ், படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கும் மீனாட்சி, இயக்குனர்கள் வெங்கட் பிரபு, சமுத்திரகனி, பி.எல்.தேனப்பன், கவிஞர் யுகபாரதி, இசை அமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி, படத்தின் தயாரிப்பாளர் சுப்பு நாராயணன், வேலா ராமமூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் விஜயகாந்த் பேசும்போது, ‘‘இது என்னுடைய மகன் ஷண்முக பாண்டியன் நடித்த படம் என்பதால் அவரை பற்றி நான் பேச விரும்பவில்லை. என் மகன் பற்றி யாராவது குறை கூறியிருந்தால் அதற்கு நான் விளக்கம் கொடுத்து பேசி இருக்கலாம். ஆனால் எல்லோரும் சண்முக பாண்டியன் உயரமாக உள்ளார், அவரிடம் நாங்கள் அனார்ந்து பார்த்து தான் பேசவேண்டி இருந்தது என்று தான் சொல்கிறார்கள். இளைஞர்கள் இணைந்து உருவாக்கியுள்ள் இந்த படத்திற்கு எல்லோரும் ஆதரவு தரவேண்டும்’’ என்றார்.

பிரேமலதா விஜயகாந்த் பேசும்போது, ‘‘இது தான் நான் பேசும் முதல் சினிமா மேடை! நான் தான் ‘மதுரவீரன்’ படத்தின் கதையை முதலில் முத்தையாவிடம் கேட்டேன். பிறகு கேப்டன் அவர்களும் கதையை கேட்டார். ‘இந்த கதையில் ஜல்லிக்கட்டு விஷயம் இருக்கிறது. ஜல்லிக்கட்டுக்காக தான் இளைஞர்கள் முதன் முறையாக ஒன்றாக இணைந்து போராடினார்கள். இந்த கதை கண்டிப்பாக வெற்றிபெறும். இதை தயாரிப்போம்’ என்றார்.

கேப்டன் விஜயகாந்த் ‘மதுரசூரன்’ என்ற படத்தில் நடித்தார். ‘மதுரவீரன்’ என்பது புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.அவர்கள் நடித்த படத்தின் டைட்டில். எம்.ஜி.ஆர்.அவர்களது டைட்டிலில் எனது மகன் நடிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த படம் கண்டிப்பாக வெற்றிப் படமாக அமையும்’’ என்றார்.

இவர்களுக்கு முன்னதாக இயக்குனர் பி.ஜி.முத்தையா, இசை அமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி, கதாநாயகிய மீனாட்சி, வேலா ராமமூர்த்தி, இயக்குனர் வெங்கட் பிரபு, சமுத்திரக்கனி முதலானோரும் பேசினார்கள்.

#MaduraveeranAudioLaunch #Maduraveeran #Vijayakanth #Shanmugapandian #Samuthirkani #ThambiRamaiah #VenkatPrabhu

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மதுரவீரன் - கொம்புள கொம்புள பாடல் வீடியோ


;