விபத்தில் மரணம் அடைந்த ரசிகர் மன்ற நிர்வாகி உடலுக்கு கார்த்தி அஞ்சலி!

விபத்தில் மரணம் அடைந்த ரசிகர் மன்ற நிர்வாகி உடலுக்கு கார்த்தி அஞ்சலி!

செய்திகள் 27-Dec-2017 10:29 AM IST VRC கருத்துக்கள்

கார்த்தி மக்கள் நல மன்றத்தின் திருவண்ணாமலை மாவட்ட செயலாளராக இருந்து வந்தவர் ஜீவன் குமார். இவர் கார் விபத்து ஒன்றில் காலமானார். 27 வயதுடைய ஜீவன் குமார் அவரது நண்பர்கள் தினேஷ், நாகராஜ் ஆகியோருடன் சென்னையிலிருந்து திருவண்ணாமலை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். கார்த்தி என்பவர் காரை ஓட்டினார். தாம்பரம் இரும்புலியூர் மேம்பாலத்தில் கார் வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தடுப்புச் சுவரை உடைத்துக்கொண்டு கீழே பாய்ந்தது. இதில் பலத்த காயம் அடைந்த நான்கு பேரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஜீவன் குமார், தினேஷ் இருவரும் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தனர். ஜீவன் குமாருக்கு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மரணம் அடைந்த ஜீவன் குமாரின் உடலுக்கு நடிகர் கார்த்தி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். மற்றும் ஜீவன் குமாரின் உடலுக்கு கார்த்தி மக்கள் நல மன்றத்தின் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் கார்த்தியின் ஏராளமான ரசிகர்களும் அஞ்சலி செலுத்தினர்.

#Karthi #TheeranAdhigaaramOndru #JeevanKumar #Tiruvannamalai #Dinesh #Kaashmora

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தம்பி டீஸர்


;