மலேசியாவில் விஷாலின் ‘இரும்புத்திரை’

விஷால், சமந்தா, அர்ஜுடன் நடிக்கும் ‘இரும்புத்திரை’ படத்தின் பாடல்கள் மலேசியாவில் வெளியாகவிருக்கிறது!

செய்திகள் 28-Dec-2017 11:07 AM IST VRC கருத்துக்கள்

விஷாலின் ‘விஷால் ஃபிலிம் ஃபேக்டரி’ நிறுவனம் தயாரிக்கும் படம் ‘இரும்புத்திரை’. பி.எஸ்.மித்ரன் எழுதி இயக்கும் இந்த படத்தில் விஷாலுடன் சமந்தா கதாநாயகியாக நடிக்க, அர்ஜுன் முக்கிய வில்லனாக நடிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசை அமைக்கிறார். இந்த படத்தின் டீஸர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. அப்போது விஷால் பேசும்போது, ‘‘நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்து வரும் படம் ‘இரும்புத்திரை’. நாளை நடக்கவிருக்கும் படப்பிடிப்புடன் இந்த படத்தின் அனைத்து படப்பிடிப்பு வேலைகளும் முடிந்துவிடும். மிக விரைவில் இந்த படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளோம். இந்த படத்தின் இசை வெளியீடு, ஜனவரி 6-ஆம் தேதி நடிகர் சங்கம் சார்பில் மலேசியாவில் நடைபெறவிருக்கும் கலைவிழாவில் நடக்கவிருக்கிறது. ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு நானும் யுவன் ஷங்கர் ராஜவும் இணைந்து பணியாற்றியுள்ள இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பராக வந்துள்ளது’’ என்றார்.

#IrumbuThirai #Vishal #Samantha #Mithran #VishalFilmFactory #Arjun #Sandakozhi2 #Thupparivalan

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஆக்‌ஷன் ட்ரைலர்


;