பாண்டிராஜ் தலைமையில் மெரினா புரட்சி!

பாண்டிராஜ் தயாரிக்கும் படம் ‘மெரினா புரட்சி’

செய்திகள் 8-Jan-2018 5:47 PM IST VRC கருத்துக்கள்

மெரினா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, பசங்க உட்பட பல படங்களை தயாரித்த பாண்டிராஜ் தனது ‘பசங்க புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் சத்தமில்லாமல் ஒரு படத்தை தயாரித்து, வருகிறது. எம்.எஸ்.ராஜ் என்பவர் எழுதி இயக்கும் இந்த படத்திற்கு ‘மெரினா புரட்சி’ என்று பெயரிடப்பட்டுள்ளது. சற்றுமுன் வெளியாகிய இப்படத்தின் டைட்டில் போஸ்டரில் ‘கலாசாரத்தை காப்பாற்ற ஒரு போராட்டம்’ என்ற டேக் லைன் இடம் பெற்றுள்ளது. இதை வைத்து பார்க்கும்போது இந்த படம் கடந்த ஆண்டு சென்னையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டம் மற்றும் ஜல்லிக்கட்டை மையப்படுத்திய படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தின் டிரைலர் மிக விரைவில் வெளியாகவிருக்கிறது என்பதையும் அறிவித்துள்ள படக்குழுவினர். இந்த படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் என்பது குறித்த தகவலைகளை வெளியிடவில்லை. ஆனால் இப்படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார், அல்ரூஃபியான் இசை அமைக்கிறார், படத்தொகுப்பை தீபக் செய்கிறார் என்பது போன்ற தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

#MarinaPuratchi #Pandiraj #PasangaProduction #MSRaj #Velraj #MarinaPuratchiMovie

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கடைக்குட்டி சிங்கம் - அடிவெள்ளக்கார வேலாயி வீடியோ பாடல்


;