விஜய்சேதுபதி படத்தை வாங்கிய சன் டிவி!

விஜய்சேதுபதி, கௌதம் கார்த்திக் நடிக்கும் ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் படத்தின் சாட்லைட் உரிமையை சன் டிவி வாங்கியது!

செய்திகள் 9-Jan-2018 2:39 PM IST VRC கருத்துக்கள்

ஆறுமுக குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி, கௌதம் கார்த்திக் முதன் முதலாக இணைந்து நடிக்கும் படம் ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’. ’7C’s Entertainement மற்றும் Amme Narayana Entertainement நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தின் இறுதிகட்ட வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வர, இப்படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தின் சாட்லைட் உரிமையை சன் டிவி நிறுவனம் வாங்கியுள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது. சமீபகாலமாக முன்னணி நடிகர்கள் நடிக்கும் பல படங்களின் சாட்லைட் உரிமையை சன் டிவி நிறுவனம் கைபற்றி வரும் நிலையில் இப்போடு விஜய்சேதுபதியின் படத்தையும் சன் டி.வி.நிறுவனம் வாங்கியுள்ளது.

இந்த படத்தில் விஜய்சேதுபதி பழங்குடி இன மக்களின் தலைவனாக நடிக்கிறார் என்றும் இந்த கெட்-அப் தவிர மற்றும் முற்றிலும் மாறுபட்ட 7 கெட்-அப்களில் விஜய்சேதுபதி நடித்துள்ளார் என்ற தகவல் ஏற்கெனவே வெளியாகியுள்ளன. இந்த படத்தில் நடிகர் சிரஞ்சீவியின் உறவினர் நிகரிகா கதாநாயகியாக நடிக்க, ஜஸ்டின் பிரபாகர் இசை அமைக்கிறார்.

#OruNallaNaalPaathuSoldren #VijaySethupathi #AarumugaKumar #GuathamKarthik #7CsEntertainement #AmmeNarayanaEntertainement

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சீதக்காதி ட்ரைலர்


;