இரண்டாம் பாக வரிசையில் சமுத்திரக்கனி, சசிகுமார் படம்?

சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடித்த ‘நாடோடிகள்’ படத்தின் இரண்டாம் பாகம்!

செய்திகள் 9-Jan-2018 5:18 PM IST VRC கருத்துக்கள்

சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிக்குமார், விஜய் வசந்த், அன்னயா, முதலனோர் நடித்து 2009-ல் வெளியாகி வெற்றிபெற்ற படம் ‘நாடோடிகள்’. இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி, தயாரிக்க சமுத்திரக்கனி முடிவு செய்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்திலும் சசிக்குமாரே கதாநாயகனாக நடிக்க இருக்கிறார் என்றும் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்கவிருக்கிறது என்றும் அந்த தகவல் தெரிவிக்கிறது. ஏற்கெனவே வெளியாகி வெற்றிப் பெற்ற பல படங்களின் இரண்டாம் பாகங்கள் உருவாகி வரும் நிலையில் இப்போது சமுத்திரக்கனி, சசிக்குமார் இணைந்த படத்தின் இரண்டாம் பாகமும் உருவாகவிருக்கிறது. ‘நாடோடிகள்’, ‘போராளி’ ஆகிய படங்களை தொடர்ந்து சமுத்திரக்கனியும், சசிக்குமாரும் இணையும் இந்த படத்தின் அதிகார்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

#Naadodigal #Sasikumar #Samuthirakani #Poraali #Naadodigal2 #CompanyProduction #VijayVasanth

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மதுரவீரன் - டிரைலர்


;