ரிலீஸ் தேதி குறித்த நாச்சியார்!

பாலா இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், ஜோதிகா நடிக்கும் ‘நாச்சியார்’ ஃபிப்ரவரி 9-ஆம் தேதி வெளியாகிறது!

செய்திகள் 10-Jan-2018 11:28 AM IST VRC கருத்துக்கள்

பாலா இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார், ஜோதிகா நடிக்கும் ‘நாச்சியார்’ படத்தின் படப்பிடிப்பு வேலைகள் அனைத்தும் முடிந்து, இப்போது படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகளும் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. பாலா இயக்கும் படம் என்றால் நிறைய காலதாமதமாகும் நிலையில், ‘நாச்சியார்’ பட வேலைகளை குறுகிய காலத்தில் செய்து முடித்துள்ளார் பாலா! இதனை தொடர்ந்து ‘நாச்சியார் படத்தை விரைவில் வெளியிடவும் திட்டமிட்டுள்ளார்கள்! ‘நாச்சியா’ரை ஃபிப்ரவரி-9 ஆம் தேதி வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். ‘மகளிர் மட்டும்’ படத்தை தொடர்ந்து ஜோதிகா கதையின் நாயகியாக நடித்துள்ள இப்படத்திற்கு இளையராஜ இசை அமைத்துள்ளார். ஒளிப்பதிவை ஈஸ்வர் கவனித்துள்ளார். இந்த படத்தை பாலாவின் B STUDIOS நிறுவனமும், ‘EON STUDIOS’ நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வர்மா ட்ரைலர்


;