நாச்சியார் வரிசையில் சவரக்கத்தி!

இயக்குனர்கள் மிஷ்கின், ராம் இணையும் சவரக்கத்தி பிஃப்ரவரி 9-ஆம தேதி ரிலீசாகிறது!

செய்திகள் 11-Jan-2018 11:30 AM IST VRC கருத்துக்கள்

‘LONEWOLF PRODUCTIONS’ நிறுவனம் சார்பில் ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ படத்தை இயக்கி தயாரித்த மிஷ்கினின் அடுத்த தயாரிப்பு ‘சவரக்கத்தி’. ஜி.ஆர்.சத்யா இயக்கியுள்ள இந்த படத்தில் மிஷ்கின், இயக்குனர் ராம் ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடிக்க, கதாநாயகியாக பூர்ணா நடித்துள்ளார். மிஷ்கின் இயக்கிய ‘பிசாசு’ படத்திற்கு இசை அமைத்த அரோல் கரோலி இசை அமைத்திருக்கும் இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளன. அனைத்து வேலைகளும் முடிவடைந்த இந்த படத்தை ஃபிப்ரவரி 9-ஆம் தேதி ரிலீஸ் செய்யவிருப்பதாக படக்குழுவினர் அதிகாரபூர்மாக அறிவித்துள்ளார்கள். பாலா இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார், ஜோதிகா நடித்துள்ள ‘நாச்சியார்’ திரைபப்டமும் ஃபிப்ரவரி 9-ஆம் தேதி வெளியாகவிருப்பதால் அந்த வரிசையில் இப்போது ‘சவரக்கத்தி’யும் இடம் பெற்றுள்ளது!

#LONEWOLFPRODUCTIONS #Savarakaththi #Mysskin #Ram #OnayumAatukuttiyum #GRSathya #Poorna #Naachiyaar

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

லைப் ஆப் ராம் வீடியோ பாடல் - 96


;