‘ஜெயம்’ ரவி, உதயநிதியுடன் களமிறங்கும் விமல்!

விமல் நடித்து தயாரித்துள்ள ‘மன்னர் வகையறா’ இம்மாதம் 26-ஆம் தேதி ரிலீசாகிறது!

செய்திகள் 13-Jan-2018 2:42 PM IST VRC கருத்துக்கள்

பொங்கலுக்கு வெளியாவதாக இருந்து, பிறகு பொங்கல் ரேசிலிருந்து விலகிய படம் ‘மன்னர் வகையறா’. விமல் கதாநாயகனாக நடித்து தயாரித்துள்ள இந்த படத்தை பூபதிபாண்டியன் இயக்கியுள்ளார். இந்த பொங்கலுக்கு சூர்யாவின் ‘தனா சேர்ந்த கூட்டம்’, விக்ரமின் ‘ஸ்கெட்ச்’, பிரபுதேவாவின் ‘குலேபகாவலி’ ஆகிய முன்று படங்களே வெளியாகியுள்ளன. இந்நிலையில் ‘மன்னர் வகையறா’ படத்தை இம்மாதம் 26-ஆம் தேதி ரிலீஸ் செய்யவிருப்பதாக அப்படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். ‘ஜெயம்’ ரவி நடித்துள்ள ‘டிக் டிக் டிக்’, உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள ‘நிமிர்’ ஆகிய படங்களும் ஜனவரி-26 ரிலீஸ் தேதி குறித்துள்ள நிலையில் இந்த படங்களுடன் விமலின் ‘மன்னர் வகையறா’ படமும் வெளியாகவிருக்கிறது. இந்த படத்தில் விமலுடன் கதாநாயகியாக ஆனந்தி நடிக்க, பிரபு, சரண்யா, ரோபோ சங்கர், யோகி பாபு, ஜெயப்பிரகாஷ் முதலானோரும் நடித்துள்ளனர்.

#MannarVahaiyara #Vemal #Anandhi #BoopathyPandian #Prabhu #RoboShankar

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

துப்பாக்கி முனை டீஸர்


;